Sales Of Luxury Homes In Chennai : சென்னையில் சொகுசு வீடுகள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது
சென்னையில் ரூ.3 கோடிக்கும் அதிகமான சொகுசு வீடுகளின் (Sales Of Luxury Homes In Chennai) விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. அதேசமயத்தில் குறைந்த விலை மற்றும் நடுத்தர விலையில் உள்ள வீடுகளின் தேவை கணிசமாக சரிந்துள்ளது. சென்னை மட்டுமல்லாமல், தலைநகர் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் போன்ற இந்தியாவின் முதல் தர நகரங்களில் விலை உயர்ந்த ஆடம்பர வீடுகளையே மக்கள் விரும்புகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் 10 முதல் 15 வருடங்களுக்கு முன்பு சிறிய வீடுகள், நடுத்தர பட்ஜெட் வீடுகள் அதிகமாக விற்பனையாகும். அதை வாங்குவதற்கு மக்கள் போட்டி போடுவார்கள், காரணம் அப்போது யாருக்கும் உறுதியான வேலை இல்லை. மேலும் அரசு ஊழியர்கள் எண்ணிக்கையும் 1 சதவீதம் என்ற அளவிற்கு கூட இருக்காது. அவர்களில் அதிக சம்பளம் வாங்குவோரும் குறைவு. ஆனால் இப்போது அப்படி இல்லை, இதனால் நடுத்தர மற்றும் குறைந்த விலை வீடுகள் விற்பனையானது கணிசமாக குறைந்து வருகிறது.
சொகுசு வீடுகள் விற்பனை அதிகரிப்பு (Sales Of Luxury Homes In Chennai)
இந்தியாவின் முதல் தர நகரங்களான மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் ஜனவரி முதல் ஜூன் வரை, மொத்தம் ரூ.3.6 லட்சம் கோடி மதிப்புள்ள ஆடம்பர வீடுகள் விற்பனையாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி என்ற அளவிற்கு சொகுசு வீடுகள் விற்பனையாகிருந்தது. தற்போது சொகுசு வீடுகள் விற்பனை விகிதம் 9 சதவீதம் அதிகரித்து இருப்பதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.
டெல்லி முதலிடம்
இந்தியாவின் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் நாட்டிலேயே 26 சதவீதம் சொகுசு வீடுகள் விற்பனையாகி உள்ளது. மேலும் டெல்லியில் விற்பனையான வீடுகளில் சுமார் 73 சதவீதம் வீடுகள் ரூ.3 கோடிக்கு மேல் மதிப்புள்ள வீடுகள் ஆகும். ஹைதராபாத் நகரத்தில் 2 சதவீதம் (Sales Of Luxury Homes In Chennai) சொகுசு வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் 10 முதல் 17 சதவீத அளவிற்கு ஆடம்பர வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் ஜனவரி முதல் ஜூன் வரை இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடுத்தர பிரிவு மற்றும் மலிவு விலை வீடுகள் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. மேலும் புனே நகரத்தில் மட்டுமே மற்ற பெருநகரங்களைப் போலல்லாமல், சொகுசு வீடுகள் மற்றும் மலிவு விலை வீடுகள் என இரண்டிலும் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!