Gistak Media

Sambadi Aattam Book Review : மாரி செல்வராஜ் எழுதிய ‘சம்படி ஆட்டம்’ புத்தக விமர்சனம்.!

இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதிய ‘சம்படி ஆட்டம்’ புத்தகம், ஆனந்த விகடனில் தொடராக வெளியான அவரது பல துணைக் கதைகள், நினைவுகள், அனுபவங்கள், சமூக நிகழ்வுகள் ஆகியவற்றின் தொகுப்பாக அமைந்த ஒரு புத்தகம் (Sambadi Aattam Book Review)   ஆகும். இது ஒரு ஹீரோ-வில்லன் கதையாக இல்லாமல் வாழ்வின் உண்மையான முகத்தை பிரதிபலிக்கும் ஒரு அற்புதப் படைப்பாகும்.  நெல்லைப் பின்னணியில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது பால்ய கால நினைவுகள், போராட்டங்கள், சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் கலை ஆர்வத்தை நேர்மையாகப் பதிவு செய்துள்ள ஒரு உணர்ச்சிப்பூர்வமான நினைவுக் குறிப்பு நூல் ஆகும்.

எழுத்தாளர் மற்றும் இயக்குநரான மாரி செல்வராஜ் பற்றி ஓரி ஓர் குறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த மாரி செல்வராஜ் 10 வருடங்களுக்கும் மேலாக இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல், சாதிய பாகுபாடு, வலி மற்றும் கிராமத்து அரசியல் ஆகியவற்றை மையக்கருவாக வைத்து பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் திரைப்படங்களை இயக்கியவர். அவரது கோபம், வலி, கேலி, அரசியல் எல்லாம் கலந்த எழுத்து நடை ஆனது அவரது கதைகளுக்கு உயிர் கொடுக்கின்றன. அவரது கதாபாத்திரங்களின் உண்மை உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன (Sambadi Aattam Book Review).

Sambadi Aattam Book Review - GISTAK media

சம்படி ஆட்டம் என்பது வெறும் புத்தகமல்ல உணர்ச்சிப்பூர்வமான நினைவுகளின் தொகுப்பு

ஒரு தனிமனிதனின் இரத்தமும் சதையுமான உணர்ச்சிப்பூர்வமான நினைவு அலைகளின் தொகுப்பு இந்த சம்படி ஆட்டம் எனும் புத்தகம் ஆகும். ஆனந்த விகடன் எனும் புத்தகத்தில் 25 வாரங்களாகத் தொடராக வெளிவந்த இந்தக் கட்டுரைகள் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் பால்ய காலத்தையும், அவர் இன்று திரையில் காட்டும் அரசியலின் வேர்களையும் நமக்கு தெளிவாக அடையாளம் காட்டுகின்றன.

Sambadi Aattam Book Review : 2025 - 26ம் காலகட்டத்தில் வெளியான தமிழ் சமூகஇலக்கியப் படைப்பாகும்

இந்த புத்தகம் அடக்குமுறையில் சிக்கிய மனிதர்களின் போராட்ட வாழ்க்கையை மையக் கருத்தாக கொண்டுள்ளது.   ஒரு நேரடி கதை வடிவில் மட்டுமல்லாமல், பல துணைக் கதைகள், நினைவுகள், அனுபவங்கள், சமூக நிகழ்வுகள் ஆகியவற்றின் தொகுப்பாக நகர்கிற இந்த புத்தகத்தில் அடக்கப்பட்டவர்கள், அதிகாரம் கொண்டவர்கள், மௌனமாக இருப்பவர்கள் மற்றும் எதிர்ப்பை உருவாக்குபவர்கள் எனப் பலதரப்பட்ட பாத்திரப்படைப்புகளை கொண்டுள்ளது (Sambadi Aattam Book Review). இந்த புத்தகத்தில் எளிமையான மொழியில் வலி மற்றும் எதிர்ப்புகள் சத்தமாக இல்லாமல் மௌனமான கிளர்ச்சி மற்றும் தாக்கம் செய்யும் விதத்தில் உள்ளது. கிராமத்து வாழ்வியல் கதைகளை விரும்புகிறவர்கள் மிகவும் ரசித்து படிக்கும் விதத்தில் எழுதியுள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top