Samsung Galaxy A 25 5G ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி தொடக்கத்தில் அறிமுகம்
சாம்சங் நிறுவனம் Samsung Galaxy A 25 5G ஸ்மார்ட்போனை வரும் 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. Samsung Galaxy A 25 5G ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் நேற்று வெளியாகி உள்ளது. இந்த கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட் போன் ஆனது LED பிளாஸ் ஆதரவு கொண்ட ட்ரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy A 25 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் :
இந்த Samsung Galaxy A 25 5G ஸ்மார்ட்போன் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகிறது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. சக்திவாய்ந்த எக்ஸ்நோஸ் 1280 (Exynos 1280) சிப்செட் வசதி Samsung Galaxy A 25 5G போனில் உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Samsung Galaxy A 25 5G Display : ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸமார்ட்போன் அறிமுகமாகிறது. மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Samsung Galaxy A 25 5G Colors : ப்ளூ, கிரே, க்ரீன் உள்ளிட்ட மூன்று நிறங்களில் இந்த Samsung Galaxy A 25 5G போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் மென்பொருள் அமைப்பு மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Samsung Galaxy A 25 5G Storage : 6GB/8GB RAM மற்றும் 128GB/256GB ஸ்டோரேஜ் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் வழங்கபடுகிறது.
- Samsung Galaxy A 25 5G Camera : 50MB பிரைமரி கேமரா + 8MB அல்ட்ரா வைடு லென்ஸ் + 2MB மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13MB கேமரா உடன் Samsung Galaxy A 25 5G ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.
- Samsung Galaxy A 25 5G Battery : இந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவருகிறது. நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது. 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Samsung Galaxy A 25 5G Rate : இந்த Samsung Galaxy A 25 5G போனின் எடை 197 கிராம் என்று கூறப்படுகிறது. ரூ.15,000 என்ற குறைந்த விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!