Gistak Media – Cinema News | Trending News | Latest News

Sankara Fish Benefits in Tamil : சங்கரா மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!

ஊட்டச்சத்து நிறைந்த கடல் மீன் வகைகளில் ஒன்று இந்த சங்கரா மீன் வகை ஆகும். இந்த மீன் தமிழக கடற்கரைப் (Sankara Fish Benefits in Tamil) பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் அற்புதமான ஊட்டச்சத்து வளத்தின் காரணமாக தமிழக சமையல்களிலும் மற்றும் மருத்துவ உலகிலும் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ளது.

சங்கரா மீனின் ஊட்டச்சத்து மதிப்பீடுகள்

ஒரு 100 கிராம் சங்கரா மீனில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பீடுகள் பின்வருமாறு,

  • புரதம் – 19-20 கிராம்,
  • கொழுப்பு – 4-5 கிராம் (ஒமேகா-3,  4-1.5 கிராம்),
  • கலோரிகள் – 115-120,
  • கால்சியம் – 20-25 மி.கி,
  • செலினியம் – 35-36 மைக்ரோகிராம்,
  • பாஸ்பரஸ் – 220 மி.கி,
  • வைட்டமின் D – 250-300 IU, 
  • வைட்டமின் B12 – 1.2-2.4 மைக்ரோகிராம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

சங்கரா மீன் கெட்ட கொழுப்பான LDL அளவை குறைத்து, நல்ல கொழுப்பான HDL அளவை அதிகரிப்பது மற்றும் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதன் மூலம் சீரான (Sankara Fish Benefits in Tamil) இதயத் துடிப்பிற்கு உதவுகிறது. மேலும் இதய அடைப்பு (Heart Attack) போன்ற அபாயத்தை குறைக்கிறது.

நேர்த்தியான கண் பார்வைக்கு உதவுகிறது

சங்கரா மீனில் வைட்டமின் A, ஓமேகா-3 மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.  இவை கண்களுக்கு மிக நல்ல பயனளிப்பவை. இவை கண் நரம்புகளுக்கு நல்ல வலுவளித்து இரவுப் பார்வையை மேம்படுத்தும். மேலும் வயதான பிறகு வரும் பார்வை குறைபாட்டை தவிர்க்கும்.

வளமான ரத்த ஆரோக்கியத்தை தரும் (Sankara Fish Benefits in Tamil)

சங்கரா மீன் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை உயர்த்தி ரத்த சோகையை (Anemia) குறைக்கும் மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக்கும். மேலும் ரத்தக் குழாய்களை வலுவாக்கும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

சங்கரா மீனில் உள்ள செலினியம், சிங்க் மற்றும் வைட்டமின் B காம்ப்ளக்ஸ் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ், பாக்டீரியா போன்றவற்றின் தாக்குதல்களிலிருந்து உடலை பாதுகாக்கும். இது அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் நோய்களை தடுக்கும்.

Sankara Fish Benefits in Tami - Gistakmedia

கர்ப்பிணி பெண்களுக்கு சங்கரா மீன் சிறந்த உணவாகும்

கர்ப்பிணிப் பெண்களின் மன அழுத்தம் குறையும், எலும்பு வலுவாகும் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை (Sankara Fish Benefits in Tamil) வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் முன்கூட்டிய பிரசவ அபாயத்தை குறைக்கும்.

உடல் சோர்வை நீக்கும்

சங்கரா மீனில் உள்ள  உயர்தர புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உடல் சோர்வை நீக்கி உடல் வலிமையை அதிகரிக்கிறது. இதனால் இது விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த உணவாகிறது.

எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

சங்கரா மீனில் வைட்டமின் D, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் எலும்புகளை வலுப்படுத்தி (Sankara Fish Benefits in Tamil) ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது. உறுதியாக பற்கள் வளர உதவுகிறது மற்றும் மூட்டு வலியை குறைக்கிறது.

மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலை ஊக்குவிக்கிறது

சங்கரா மீனில் உள்ள ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் மன அழுத்தத்தை குறைத்து டிப்ரஷன்,  அல்சைமர் நோய் அபாயத்தை தடுக்கிறது. மேலும் மூளை வளர்ச்சியை ஊக்குவித்து நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top