SBI CBO 2023 : சர்க்கிள் ஆபிசர் பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
SBI CBO 2023 : உங்களுக்கு வங்கி வேலை வேண்டுமா எஸ்.பி.ஐ வங்கியில் சர்க்கிள் ஆபிசர் பணியிடங்களுக்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எஸ்.பி.ஐ வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வட்ட அளவிலான அதிகாரி (CIRCLE BASED OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 5,309 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுயுள்ளது.
SBI CBO 2023 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : ஸ்டேட் பாங்க் ஆஃப் (SBI CBO 2023) இந்தியா வங்கியில் காலியாக இருக்கும் சர்க்கிள் ஆபிசர் (CIRCLE BASED OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கு 5,309 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை (UG) முடித்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்த சர்க்கிள் ஆபிசர் பணியிடங்களுக்கு (SBI CBO 2023) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 31.10.2023 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுயுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த சர்க்கிள் ஆபிசர் பணியிடங்களுக்கு (SBI CBO 2023) தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.36,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுயுள்ளது.
- தேர்வு செய்யும் முறை (Selection Process) : இந்த சர்க்கிள் ஆபிசர் பணியிடங்களுக்கு (SBI CBO 2023) எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்துதெடுக்கப்படுவார்கள் எனவும் எழுத்து தேர்வு என்பது கணினி வழி தேர்வு எனவும் தெரிவிக்கப்பட்டுயுள்ளது.
- எழுத்துத் தேர்வு (Written Exam) : எழுத்துத் தேர்வானது இரண்டு பிரிவுகளாக நடைபெறும். ஒன்று கொள்குறி வகை வினாத் தேர்வு (Objective Test) மற்றும் விரிவான விடையளித்தல் தேர்வு (Descriptive Test) ஆகும். கொள்குறி வகை வினாத் தேர்வானது 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English Language – 30) கணினி திறனறிதல் (Computer Aptitude – 20) வங்கி தொடர்பான கேள்விகள் (Banking Knowledge – 40) மற்றும் பொது அறிவு மற்றும் பொருளாதாரம் (General Awareness / Economy – 30) ஆகிய மூன்று பகுதிகளில் இருந்து மொத்தம் 120 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான மொத்த கால அளவு 2 மணி நேரம் ஆகும். இதனைத் தொடர்ந்து இரண்டாம் பகுதியில் விரிவாக எழுதுதல் (Descriptive Test) தேர்வு நடைபெறும். இதில் கட்டுரை அல்லது கடிதம் எழுதுதல் தொடர்பாக இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். மொத்தம் 50 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடைபெறும். இதற்கான கால அளவு 30 நிமிடங்கள் ஆகும்.
- நேர்முகத் தேர்வு (Interview) : இந்த முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் இரண்டும் வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
- விண்ணப்பிக்கும் முறை (Selection Process) : இந்த சர்க்கிள் ஆபிசர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://sbi.co.in/web/careers/current-openings அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த சர்க்கிள் ஆபிசர் பணியிடங்களுக்கு (SBI CBO 2023) 12.12.2023 அன்று வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த சர்க்கிள் ஆபிசர் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுயுள்ளது.
- மேலும் விவரங்களுக்கு : https://sbi.co.in/documents/77530/36548767/212223-Final+Advertisement.pdf/3a3945e6-d8ee-fc51-8992-99d0ff942541?t=1700564748917 என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!