Gistak Media – Cinema News | Trending News | Latest News

SBI CBO Recruitment 2026 : எஸ்பிஐ வங்கியில் 2,050 சர்க்கிள் ஆபிசர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் 2,050 சர்க்கிள் ஆபிசர் பணியிடங்களுக்கு (Circle Based Officer) ஜனவரி 29, 2026 முதல் பிப்ரவரி 18, 2026 வரை (SBI CBO Recruitment 2026) விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது புதிய பட்டதாரிகளுக்கு மட்டுமல்லாமல், முன் அனுபவம் உள்ளவர்களுக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது.

பணியின் விவரங்கள்

  • பதவி – சர்க்கிள் பேஸ்டு ஆபிசர் (Circle Based Officer)
  • மொத்த காலிப்பணியிடங்கள் – 2,050, இதில் ஒவ்வொரு மாநில/சர்க்கிளுக்கும் இடஒதுக்கீடு தனித்தனியாக உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை வட்டாரத்திற்கு மட்டும் 165 இடங்கள்.
  • மாதச் சம்பளம் – Rs.48,480/- Rs.85,920/-

தேவையான கல்வித் தகுதி

  • ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டப்படிப்பு (Any Degree) இருந்தாலே போதும்.
  • ஒருங்கிணைந்த இரட்டை பட்டப்படிப்பு (Integrated course) முடித்தவர்களும் (SBI CBO Recruitment 2026) விண்ணப்பிக்கலாம்.
  • MBBS, Engineering, Chartered Accountant (CA), Cost Accountant போன்ற பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
SBI CBO Recruitment 2026 - Gistakmedia

தேர்வு செய்யப்படுகின்ற முறை

  • ஆன்லைன் தேர்வுமுறை
  • நேர்காணல் தேர்வுமுறை

வயது வரம்பு தகுதி

  • குறைந்தபட்ச வயது – 21 ஆண்டுகள்,
  • அதிகபட்ச வயது – 30 ஆண்டுகள்.​

அரசு விதிகளின்படி வயது தளர்வுகள்

  • SC / ST பிரிவு – 5 ஆண்டுகள்.​
  • OBC (Non-creamy layer) பிரிவு – 3 ஆண்டுகள்.​
  • அவரவர்களின் பிரிவைப் பொறுத்து மாற்றுத் திறனாளிகள் (PwBD) – 10 முதல் 15 ஆண்டுகள் வரை.

விண்ணப்பக் கட்டணம் (SBI CBO Recruitment 2026)

  • பொது/OBC/EWS பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 750/- என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • SC/ST/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள் & டைம் லைன்

  • ஆன்லைன் மூலம் விண்ணப்ப தொடக்க தேதி – 29 ஜனவரி​
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 18 பிப்ரவரி​

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top