இந்திய நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் 1000 கணக்கான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள வங்கி சர்க்கிள் அதிகாரி (CBO) பணியிடங்களை (SBI Circle Based Officer Recruitment) நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
SBI Circle Based Officer Recruitment
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள வங்கி சர்க்கிள் அதிகாரி (CBO) பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் 2600 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
இந்த வங்கி சர்க்கிள் அதிகாரி (CBO) பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் ஒரு வணிக வங்கி (SBI Circle Based Officer Recruitment) அல்லது ஊரக வங்கிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியற்றிய அனுபவம் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இந்த வங்கி சர்க்கிள் அதிகாரி (CBO) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இந்த வங்கி சர்க்கிள் அதிகாரி (CBO) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,400 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள வங்கி சர்க்கிள் அதிகாரி (CBO) பணியிடங்களுக்கு முதலில் ஆன்லைன் எழுத்து தேர்வு நடைபெறும் எனவும் இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்காணலுக்கு (SBI Circle Based Officer Recruitment) அழைக்கப்பட்டு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, கரூர், கடலூர், ஈரோடு, சேலம், வேலூர், நாமக்கல், விருதுநகர், தஞ்சை ஆகிய நகரங்களில் எழுத்து தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்பிக்க கட்டணம் (Application Fees)
இந்த வங்கி சர்க்கிள் அதிகாரி (CBO) பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினருக்கு ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இந்த வங்கி சர்க்கிள் அதிகாரி (CBO) பணியிடங்களுக்கு வரும் மே 29 தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.