SBI JA 2023 : 8773 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
SBI JA 2023 : இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI JA 2023) வங்கியில் ஜூனியர் அஸோசியட்ஸ் (Junior Associates) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 8773 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டு மாநிலங்களுக்கும் 275 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான தகுதிகள், தேர்வு முறை என்னென்ன? மற்றும் விண்ணபிக்கும் முறை எப்படி என்பது குறித்து பார்க்கலாம். மேலும் ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI JA 2023 :
- கல்வித் தகுதி (Educational Qualification) : அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 31.12.2023 க்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்த ஜூனியர் அஸோசியட்ஸ் (SBI JA 2023) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 01.04.2023 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த ஜூனியர் அஸோசியட்ஸ் பணியிடங்களுக்கு (SBI JA 2023) தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு ரூ.37,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு முறை (Selection Process) : முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. மேலும் இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதல்நிலைத் தேர்வு : முதல்நிலைத் தேர்வானது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English Language) திறனறிதல் (Reasoning Ability) கணிதம் (Numerical Ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வானது தகுதித் தேர்வு மட்டுமே. மேலும் முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்றால் மட்டுமே முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
- முதன்மைத் தேர்வு : முதன்மைத் தேர்வானது 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் திறனறிதல், ஆங்கிலம் மற்றும் கணிதம் மற்றும் பொது அறிவு மற்றும் வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 190 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவானது 2 மணி நேரம் 40 நிமிடங்கள். இந்த தேர்வில் ஒருவர் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே அவர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் கடைசியாக வட்டார மொழி தகுதித் தேர்வு நடைபெறும். பிறகு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிக்கும் முறை (Selection Process) : இந்த ஜூனியர் அஸோசியட்ஸ் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://sbi.co.in/web/careers/current-openings அல்லது https://ibpsonline.ibps.in/sbijaoct23/ என்ற இணையதளப் பக்கத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த ஜூனியர் அஸோசியட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த ஜூனியர் அஸோசியட்ஸ் பணியிடங்களுக்கு 07.12.2023 தேதி வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
- மேலும் விவரங்களுக்கு : https://sbi.co.in/documents/77530/36548767/161123-JA+2023-Detailed+Advt.pdf/926d28be-7df8-36f3-7113-344404668498?t=1700129762521 என்ற அதிகார்வப்பூர்வ இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!