Sbi Specialist Cadre Officer : எஸ்பிஐ வங்கியில் மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு
மும்பையை தலைமையிடமாக கொண்டுஇயங்கி வரும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள மேலாளர் (Manager), துணை மேலாளர் (Deputy Manager) பணியிடங்களை (Sbi Specialist Cadre Officer) நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி, சம்பள விவரம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
Sbi Specialist Cadre Officer
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள மேலாளர் பதவிக்கு 34 காலிப்பணியிடங்களும், துணை மேலாளர் பதவிக்கு 25 பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 59 காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகின்றன.
2.கல்வி தகுதி (Educational Qualification)
எஸ்பிஐ வங்கியில் இந்த மேலாளர்/துணை மேலாளர் பதவிக்கு பிஇ/பிடெக் மற்றும் MCA பாடப்பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி (Sbi Specialist Cadre Officer) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் MBA முடித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், ரிஸ்க் மேனேஜ்மெண்ட்/கஸ்டமர் ரிலேஷன்ஷிப் மேனேஜ்மண்ட் உள்ளிட்ட பிரிவுகளில் குறைந்தது 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
எஸ்பிஐ வங்கியில் இந்த மேலாளர்/துணை மேலாளர் பணியிடங்களுக்கு 2.10.2025 தேதியின் படி 28 வயது முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு விதிகளின் படி 13 ஆண்டுகள் வரை வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
4.சம்பளம் (Salary)
எஸ்பிஐ வங்கியில் மேலாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.85,920/- முதல் ரூ.1,05,280/- வரையும், துணை மேலாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.64,820/- முதல் ரூ.93,960/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
எஸ்பிஐ வங்கியில் இந்த மேலாளர்/துணை மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பங்கள் (Sbi Specialist Cadre Officer) பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
எஸ்பிஐ வங்கியில் இந்த மேலாளர்/துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.750 செலுத்த வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள், எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
எஸ்பிஐ வங்கியில் இந்த மேலாளர்/துணை மேலாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 02.10.2025 கடைசி நாளாகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!