Shaheen Afridi : பும்ராவுக்கு வாழ்த்து தெரிவித்த அப்ரிடி...
ஜஸ்பிரித் பும்ரா :
சமீபத்தில் ஆண் குழந்தைக்கு தந்தையான இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் Shaheen Afridi பரிசு வழங்கினார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் சஞ்சனா கணேசன் கர்ப்பமானார். இந்நிலையில் இவர்களுக்கு செப்டம்பர் 4ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவத்தின்போது மனைவியுடன் இருப்பதற்காக பும்ரா நேபாளத்துக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார். குழந்தை பிறந்து அடுத்த 4 நாட்களில் பயிற்சிக்காக இந்திய அணியில் சேர்ந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா களம் இறங்கினார். இந்த முறை பாகிஸ்தான் டாஸ் வென்றது. ஆனால் இந்த முறை பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது திடீரென பலத்த மழை பெய்தது. மாலை 4.55 மணியளவில் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை நிற்கவில்லை. இதையடுத்து நடுவர்கள் சரிபார்த்து மீண்டும் மழை பெய்யத் தொடங்கிய 9 மணிக்கு ஆட்டத்தை தொடங்க முடிவு செய்தனர்.
Shaheen Afridi :
இதனால் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நாளை தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஓய்வறையில் இருந்த பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் Shaheen Afridi, இந்திய அணியின் பும்ராவை சந்தித்தார். அப்போது புதிய தந்தை பும்ராவுக்கு Shaheen Afridi அன்புப் பரிசை வழங்கினார். இதனால் நெகிழ்ந்து போன பும்ரா, ஷஹீன் அப்ரிடிக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த வீடியோ பாகிஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா-பாகிஸ்தான் அணி வீரர்கள் எதிரும் புதிராகவே இருந்து வந்தனர், ஆனால் தற்போது இரு அணி வீரர்களும் சகோதரர்களாக அன்பை பரிமாறிக் கொள்வது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!