Gistak Media

Shubhanshu Shukla Fly To Space On May 29 : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மே 29-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்கிறார்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஆகியவை இணைந்து 2025-ல் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் 4’ திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வரும் மே 29-ம் தேதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பெல்கான் ராக்கெட்’ மூலம் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (Shubhanshu Shukla Fly To Space On May 29) செல்லவுள்ளார். இதன் மூலம் கடந்த 1984-ம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ராகேஷ் சர்மாவை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் 2-வது இந்திய வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைக்க உள்ளார். மேலும் இவர் கடந்த 2006-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்து 2000 மணிநேரம் வானில் பறந்த அனுபவம் பெற்றுள்ளார்.

சுபான்ஷுவின் பயண விவரங்கள்

இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா நாசாவின் மூத்த விண்வெளி வீரர் பெக்கி விட்சன் தலைமையில் போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் இணைந்து ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் 4 திட்டத்தில் விமானியாகப் பணியாற்றுவார் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பணி நாசா மற்றும் இஸ்ரோ (Shubhanshu Shukla Fly To Space On May 29) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும். இதன் மூலம் இந்தியாவின் விண்வெளி லட்சியங்களையும், சர்வதேச கூட்டாண்மைகளையும் முன்னேற்றுவதற்கு இது ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.

Shubhanshu Shukla Fly To Space On May 29 - Gistakmedia

சர்வதேச விண்வெளி நிலையம் (Shubhanshu Shukla Fly To Space On May 29)

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கவுள்ள கேப்டன் சுபான்ஷு சுக்லா இஸ்ரோவின் கனவு திட்டமான மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் உயிர் ஆதரவு அமைப்புக்கு தேவையான ‘சயனோ பாக்டீரியாவை’ சோதிப்பது மற்றும் விண்கல செயல்பாடுகள் (Shubhanshu Shukla Fly To Space On May 29) உள்ளிட்ட அறிவியல் பரிசோதனைகளில் பங்கேற்கவுள்ளார். இதன் மூலம் 2026-ல் இஸ்ரோ திட்டமிட்டபடி மனித விண்வெளிப் பயணத் திட்டமான ககன்யானுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top