Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
இந்திய விண்வெளி வீரரான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா கடந்த மாதம் இறுதியில் ஆக்ஸியம்-4 திட்டத்தில் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், ஹங்கேரியின் திபோர் கபு மற்றும் போலந்தின் ஸ்லாவோஸ் ஆகியோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். அங்கு 14 நாட்கள் தங்கிய சுபான்ஷு சுக்லா பல்வேறு ஆய்வுகளை முடித்த நிலையில், இன்று டிராகன் கிரேஸ் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மீண்டும் பூமிக்கு (Shubhanshu Shukla Return) புறப்படுகிறார். மேலும் ரகேஷ் சர்மாவுக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.
யார் இந்த சுபான்ஷு சுக்லா
விண்வெளி துறையில் தொடர்ச்சியாக குறைந்த செலவில் வெற்றிகரமாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சர்வதேச அளவில் மிகவும் வெற்றிகரமான விண்வெளி ஆய்வு நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாகவே நடந்து வரும் நிலையில், இதற்காக 4 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழு தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 4 பேர் கொண்ட குழுவில் ஒருவர் தான் இந்த சுபான்ஷு சுக்லா. ககன்யான் திட்டத்திற்கு முன்பாகவே அமெரிக்காவின் நாசா உதவியுடன் சுபான்ஷு சுக்லாவை (Shubhanshu Shukla Return) சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்ப இஸ்ரோ முடிவு செய்தது. இதன் மூலம் அவருக்கு கிடைக்கும் அனுபவம் ககன்யான் திட்டத்திற்கு பெரிதும் உதவும் என்பதால் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தீவிர பயிற்சி
இதற்காக கடந்த சில மாதங்களாக சுபான்ஷு சுக்லா தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்ட பின்னர், கடந்த மாதம் ஜூன் 25-ம் தேதி நாசா குழுவுடன் சர்வேதேச விண்வெளி பயணத்தை தொடங்கிய சுபான்ஷு சுக்லா 24 மணி நேரம் பயணித்து (Shubhanshu Shukla Return) ஜூன் 26-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். கடந்த இரண்டு வாரங்களாக (14 நாட்கள்) விண்வெளி நிலையத்தில் இருந்த அவர் அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.
பூமி திரும்புகிறார் (Shubhanshu Shukla Return)
இந்நிலையில் இரண்டு வார ஆய்வு பணிகள் முடிந்த நிலையில், சுபான்ஷு சுக்லா 3 விண்வெளி வீரர்களுடன் இன்று மாலை 4.30 மணியளவில் டிராகன் கிரேஸ் விண்கலத்தின் மூலம் புறப்படும் அவர்கள் சுமார் 23 மணி நேரம் பயணத்திற்கு பிறகு, நாளை ஜூலை 15-ம் தேதி 3 மணியளவில் அமெரிக்காவின் கலிபோர்னியா கடலில் அவர்களின் விண்கலம் தரையிறங்கும். அங்கு அவர்களை மீட்க குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு வாரம் அவர் விண்வெளியில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்புவதால் அவரின் உடலில் சில மாற்றங்கள் நடந்திருக்கும். இதனால் சில நாட்கள் வரை அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று நாசா தெரிவித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!