Gistak Media

Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?

நீரிழிவு நோய் ஆனது திடீரென வரும் ஒரு நோய் அல்ல. அதனால் அதன் ஆரம்ப கால அறிகுறிகள் (Signs of Diabetes) பற்றி தெரிந்து கொண்டால் மருந்து தேவையில்லாமல் பெரிய சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் (Signs of Diabetes)

அளவுக்கு அதிகமாக தாகம் ஏற்படுதல்

உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதன் காரணமாக உடலில் நீர் இழப்பு அதிகம் ஏற்படுகிறது. இந்த அதிக அளவு நீர் இழப்பின் காரணமாக தாகம் அதிக அளவு தாகம் ஏற்படுகிறது. இது நீரிழிவு நோயின் மிக முக்கியமான ஆரம்பகால அறிகுறியாகும். குறிப்பாக இது இரவு நேரங்களில் மிகவும் தீவிரமடைகிறது. அளவுக்கு அதிகமாக சிறுநீர் கழிக்கப்படுவதால் உடலில் டீஹைட்ரேஷனுக்கு வாய்ப்புகள் அதிகமாகிறது.

அதிக அளவில் சிறுநீர் உற்பத்தி ஏற்படுதல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

சிறுநீரகங்கள் அதிக அளவில் குளுக்கோஸை வெளியேற்ற முயற்சிப்பதால் சிறுநீர் உற்பத்தி ஆனது அதிகரிக்கிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் வழக்கத்தை ஏற்படுத்துகிறது. இரவு நேரங்களில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அளவுக்கு அதிகமாகன பசியை உணர்தல் (Signs of Diabetes)

உடலில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகமாக இருந்தாலும் அது செல்களுக்கு செல்ல முடியாத காரணத்தால் உடலில் எரிசக்தி குறைவு ஏற்படுகிறது. இதனால் உடல் ஆனது மூளைக்கு பசிக்கான சிக்னலை அனுப்புகிறது. இதனால்

  • அளவுக்கு அதிகமாகன பசியை உணர்தல்,
  • அடிக்கடி பசியை உணர்தல்,
  • சாப்பிட்டதும் மீண்டும் பசியை உணர்தல்,

போன்றவை ஏற்படுகின்றன. இதனால் அதிக அளவு உணவு உண்டாலும் திருப்தி இல்லை.

உடலின் எடை குறைதல்

உடலில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்த முடியாமல் போவதால், உடல் ஆனது கொழுப்புகளையும் (Signs of Diabetes) மற்றும் புரதங்களையும் எரிக்கின்றது. இது விவரிக்க முடியாத அளவிற்கு எடை குறைவு நிகழ்வாக வெளிப்படுகிறது.

உடலில் சோர்வு உணரப்படுதல்

உடல் ஆனது குளுக்கோஸை பயன்படுத்த முடியாமல் கொழுப்புகளையும் மற்றும் புரதங்களையும் எரிப்பதால் உடல் எடை குறைந்து அன்றாட செயல்களில் சோர்வு உணரப்படுகிறது. உடலுக்கு தேவையான குளுக்கோஸ் செல்களுக்கு செல்லாததால், உடலுக்கு போதுமான எரிசக்தி கிடைக்காது. உடல் தனது உற்சாக ஆற்றலை இழக்கிறது, எப்போதும் சோர்வு, வேலை செய்ய ஆற்றல் இல்லாமை மற்றும் களைப்பு ஏற்படுகிறது.

Signs of Diabetes - Gistakmedia

தெளிவற்ற மங்கலான பார்வை ஏற்படுதல்

உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் கண் லென்ஸில் திரவ மாற்றம் ஏற்படுகிறது. இதனால் பார்வை blur ஆகி தெளிவற்ற மங்கலான பார்வை ஏற்படுகிறது. இது தற்காலிகமாக ஏற்படும். இது உடனடியாக (Signs of Diabetes) கண்டறியப்பட்டு தவிர்க்கப்படவில்லை என்றால் நிரந்தர பார்வை குறைவு ஏற்படும்.

காயங்கள் மெதுவாக குணமடைதல்

உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் இரத்த ஓட்டம் பாதிப்பு  ஏற்படுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. காயங்கள் குணமடைவதில் தாமதம் ஏற்பட்டு சிறு காயங்களும் நீண்ட நாட்கள் இருக்கும். காயங்கள் மெதுவா ஆறும்.

தோல்தொற்று பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுதல்

உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் வைரஸ், பாக்டீரியா எதிர்ப்பு குறைந்து தோல் பிரச்சனைகள் மற்றும் தொற்றுகள்,

  • Skin infection,
  • Fungal infection,
  • Urinary infection,

 போன்றவை அடிக்கடி ஏற்படும். மேலும் திரும்பத் திரும்ப தொற்றுகள் வரலாம்.

நரம்பு பாதிப்பால் கைகால்களில் கூச்சு அல்லது உணர்வின்மை ஏற்படுதல்

உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் நரம்புகள் பாதிக்கப்பட்டு கைகால்களில் கூச்சு அல்லது உணர்வின்மை ஏற்படுகிறது. இது Peripheral Nerves ஐ பாதிப்பதால் Tingling மற்றும் Numbness ஏற்படும்.

அடிக்கடி இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்படுதல்

உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து  அடிக்கடி இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்படும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top