Siren Box Office Day 2 : பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ஜெயம் ரவி
ஜெயம் ரவி நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் சைரன். ஆண்டனி பாக்யராஜ் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சைரனும் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வசூலித்துள்ளது. அதன்படி, முதல் நாளை விட இரண்டாவது நாளில் சைரன் அதிக வசூலை (Siren Box Office Day 2) பெற்றுள்ளது. ஜெயம் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ‘ஜெயம் ரவி’, தற்போது கோலிவுட்டில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். ஜெயம் ரவி தனது பெரும்பாலான படங்களில் சாக்லேட் பாய் கேரக்டரில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் பேராண்மை, தனி ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் ஜெயம் ரவியின் கேரியரில் மைல் கல்லாக அமைந்தது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மன் வேடத்தில் நடித்த ஜெயம் ரவி, தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.
முக்கியமாக கமல் – மணிரத்னம் தயாரிக்கும் தக் லைஃப் படத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் அகிலன், இறைவன் போன்ற தோல்விப் படங்களை கொடுத்த ஜெயம் ரவி தற்போது சைரன் படத்தின் மூலம் மீண்டும் வந்துள்ளார். இந்த வாரம் வெளியான சைரன் ஜெயம் ரவி மார்க்கெட்டில் கொஞ்சம் புயலை கிளப்பியுள்ளது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சைரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயம் ரவியுடன் அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
Siren Box Office Day 2 :
ஆக்ஷன் ப்ளஸ் சென்டிமெண்ட் என கமர்சியலாக உருவாகியுள்ள சைரன் நல்ல திரைக்கதையுடன் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சைரன் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டி வருகிறது. சைரன் முதல் நாளில் நல்ல ஓப்பனிங்கை பெற்று ரூ.1.40 கோடி வரை வசூல் செய்தது. இதனால் இரண்டாம் நாளான சனிக்கிழமை வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், சனிக்கிழமையான நேற்றும் சைரன் வசூல் அதிகரித்துள்ளது. சைரனின் இரண்டாம் நாள் வசூல் ரூ.1.73 கோடி என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் (Siren Box Office Day 2) தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.3.13 கோடி வசூல் செய்துள்ளது சைரன். ஜெயம் ரவி நடித்த அகிலன், இறைவன் படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Slideshows
-
Candidates Chess 2026 : கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் வைஷாலி.!
-
Sambadi Aattam Book Review : மாரி செல்வராஜ் எழுதிய 'சம்படி ஆட்டம்' புத்தக விமர்சனம்.!
-
IPL 2026 CSK vs KKR : சென்னை அணியின் வெற்றி தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!
-
Vivo T5 Pro 5G : பட்ஜெட் விலையில் 'விவோ டி5 ப்ரோ 5ஜி' நாளை அறிமுகம்....
-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
-
CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி
-
Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?
-
LIK Movie Review : எப்படி இருக்கிறது LIK.. நான்காவது முறையாக ஹிட் அடித்தாரா பிரதீப்?