Gistak Media – Cinema News | Trending News | Latest News

Sivagamiyin Sapatham Book Review : கல்கி எழுதிய ‘சிவகாமியின் சபதம்’ புத்தக விமர்சனம்..!

வரலாற்றுப் பின்னணியை அடிப்படையாக கொண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய சிறந்த நாவல்களில் ஒன்றுதான்  சிவகாமியின் சபதம் (Sivagamiyin Sapatham Book Review) ஆகும். கல்கி வார இதழில் 1944 ஜனவரி முதல் 1946 ஜூன் வரை தொடர்கதையாக வெளிவந்த நாவலாகும்.

வரலாற்று நிகழ்வுகளை உண்மைத்தன்மையுடன் விளக்கியுள்ள நாவல்

இந்த நாவல் சிறந்த சரித்திரப்புனைவுகளை கொண்டுள்ளது. புத்தக வாசகர்களை ஈர்க்கும் விதத்தில் காதல், துயரம், போர் மற்றும் வெற்றி ஆகியவற்றின் வரலாற்று நிகழ்வுகளை உண்மைத்தன்மையுடன் கல்கி கிருஷ்ணமூர்த்தி இந்த நாவலில் எழுதியுள்ளார். இந்த நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல் மற்றும் சிதைந்த கனவு என நான்கு பகுதிகளை கொண்டுள்ளது.

7-ம் நூற்றாண்டு பல்லவர்-சாளுக்கியர் மோதல்களின் அடிப்படையிலான கதை

இந்த நாவல் 7-ம் நூற்றாண்டில் நடைபெற்ற பல்லவர்- சாளுக்கியர் மோதல்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்லவர்களின் மீது படையெடுத்த சாளுக்கிய மன்னன் புலிகேசி காஞ்சி நகரத்தை முற்றுகையிட்டு மகேந்திரவர்ம பல்லவனை தோற்கடித்து அந்நகரத்தை கைப்பற்றுகிறான். அழகிய நாட்டியக் கலைஞரான சிவகாமி சிறைபிடிக்கப்பட்டு வாதாபி நகரில் அடைக்கப்படுகிறாள். புலிகேசி மன்னன் தன்னுடைய வெற்றி விழாவில் பாரசீகத் தூதர்கள் முன்பாக நடனமாட சிவகாமியை நிர்பந்திக்கிறான். சிவகாமி தனது மறுப்பை தெரிவிக்க புலிகேசி மன்னன் பல்லவப் படையை கொடுமையாகப் படைத்து நிர்பந்திக்கிறான். சீற்றமடைந்த சிவகாமி தனது காதலன் நரசிம்மவர்ம பல்லவன் இந்த வாதாபி நகரத்தைத் தீக்கிரையாக்கி தன்னை மீட்டுக் கொண்டு செல்லும் வரை, தான் இந்நகரை விட்டு வெளியேறப் போவதில்லை (Sivagamiyin Sapatham Book Review) என சபதம் செய்கிறாள். அதுவே சிவகாமியின் சபதம் ஆகும். இறுதியில் நரசிம்ம பல்லவர் வாதாபியை அழித்து சாளுக்கிய மன்னன் புலிகேசியை வெற்றி கொள்கிறார்.

Sivagamiyin Sapatham Book Review - Gistakmedia

காவிய படைப்பிற்கு வடிவமைக்கப்பட்ட முக்கிய பாத்திரங்கள் (Sivagamiyin Sapatham Book Review)

வரலாற்றுச் சம்பவங்களையே அடித்தளமாகக் கொண்டு  எழுதப்பட்ட காவிய படைப்பிற்கு மையமாக வடிவமைக்கப்பட்ட முக்கிய பாத்திரங்கள், 

  • ஆடல் அரசி மற்றும் நாயகியாக சிவகாமி.
  • கதை நாயகனாக பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவர்.
  • பல்லவ மன்னனின் தளபதியாக பரஞ்சோதி.

பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவரின் தந்தையாக மகேந்திரவர்ம பல்லவன்.

இந்த நாவல் பெற்றுள்ள மதிப்பீடுகள்

  • சரித்திர ஆர்வத்தை இளைஞர்களுக்கு ஊக்குவிக்கும் நாவல்.
  • எத்தனை முறை படித்தாலும் சலிக்காத நாவல்.
  • தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ள நாவல்.
  • இந்நாவல் தமிழ் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டியுள்ளது.

இந்நாவல் சரித்திர ஆர்வத்தை ஏற்படுத்தும் காவியம்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top