Gistak Media

SK in Ayalaan Teaser: அயலான் படத்தின் டீசர் வெளியீடு

Ayalaan Teaser: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயலான்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் “அயலான்” ஆகும். கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசைமைத்துள்ளார். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாகி வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியத் திரையுலகில் 4500க்கும் மேற்பட்ட VFX காட்சிகளைக் கொண்ட முதல் முழுநீளப் படம் என்பதால், படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இழுபறியாகவே தொடர்ந்து வந்தது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில் ‘அயலான்’ படத்தின் டீசரை அக்டோபர் 6ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக இயக்குனர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

படத்தின் டீசர் (Ayalaan Teaser) எப்படி இருக்கு?

Ayalaan Teaser: இந்த படத்தை இன்று நேற்று நாளை என்ற படத்தில் கால இயந்திர கதைக்களத்தில் அசத்தலாக ஹிட் கொடுத்த இயக்குனர் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஏற்கனவே ஏலியன்ஸ் கதைக்களம் கொண்டது என்பது ரசிகர்களுக்கு தெரியும். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்கள் மிகவும் ரசிக்கும் வகையில் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள வேற்றுகிரகவாசிகளின் கிராபிக்ஸ் ஹாலிவுட் படம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த வேற்றுகிரகவாசி ஒருவர் தமிழகத்தில் வசிக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்களை சந்திப்பதை கட்டப்பட்டுள்ளது. அவரது நண்பர்களுடன் ஏலியனுக்கு நிகழும் நிகழ்வுகளுமே கதைக்களமாக அமைந்துள்ளது என்பதை டீசரில் காட்டப்பட்டுள்ளது. வேற்றுகிரகவாசிகளின் கதைக்களம், கிராபிக்ஸ் காட்சிகள், சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நகைச்சுவை மற்றும் யோகிபாபுவின் காமெடி கலவையுடன் இப்படம் உருவாகியுள்ளதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top