Sleeping Time According To Age : போதிய நேரம் தூங்கும் குழந்தை தான் படிப்பில் சுட்டியாக இருக்குமாம்!
Sleeping Time According To Age :
Sleeping Time According To Age : குழந்தைகள் டீன் ஏஜ் பருவம் வரை ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது உறங்க வேண்டும். தூக்கப் பற்றாக்குறைக்கு உள்ளாகும் பிள்ளைகளின் மூளைத் திறன் பாதிக்கப்படுகிறதாம் இதனை சமீபத்தில் ஆய்வு நடத்திய “லண்டன் பல்கலைக்கழகம்” உறுதி செய்துள்ளது.
இரவு தங்களுடைய பெற்றோருடன் சேர்ந்து அதிக நேரம் விழித்திருக்கும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் கணிதம், அறிவியல், புத்தக வாசிப்பு போன்றவற்றில் ஈடுபடுவது கடினமாக உணர்வார்களாம். தூக்கம் குறையும் பிள்ளைகளுக்கு புதிய தகவல்களை உள்வாங்கும் மூளையின் திறன் பாதிக்கப்பட்டு இந்த பிரச்சனை ஏற்படுவதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதே சமயத்தில் போதிய அளவு தூங்கும் குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களின் கற்றல், நினைவாற்றல், கவனம், நடத்தை, போன்ற ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியம் மேம்பட்டு இருந்துள்ளன. போதுமான அளவு தூக்கம் இல்லாத குழந்தைகளுக்கு உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், மற்றும் மனச்சோர்வு கூட ஏற்படலாம்.
குழந்தை ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்! :
Sleeping Time According To Age :
- 1 வயதுடயை குழந்தைகள் : 12-16 மணி நேரம்
- 1 – 2 வயதுடயை குழந்தைகள் : 11-14 மணி நேரம்
- 3 – 5 வயதுடயை குழந்தைகள் : 10-13 மணி நேரம்
- 12 வயதுடயை குழந்தைகள் : 9-12 மணி நேரம்
- 13 -18 பதின்ம வயதினர் : 8-10 மணி நேரம் தூங்குவது மிகவும் நல்லது.
பெற்றோர்கள் (Parents) குழந்தைகளுக்கு தினமும் போதிய நேரம் தூக்கத்தைப் பெறவைக்க (Parents) என்ன செய்யலாம் என்று பார்ப்போம். முதலில் பெற்றோர்கள் தினமும் படுக்கைக்குச் செல்ல நிலையான ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிறுவ வேண்டும். படுக்கை அறையின் விளக்குகளை மங்கச் செய்யுங்கள். படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே டிவி, செல்போன், பார்க்க அனுமதிக்காதீர்கள். குழந்தைகளை வெது வெதுப்பான தண்ணீரில் குளித்துவிட்டு வரச் சொல்லுங்கள். புத்தகம் வாசிக்கச் சொல்லலாம். இப்படியெல்லாம் செய்தால் குழந்தைகளுக்கு எளிதில் தூக்கம் எற்படும்.
இல்லையென்றால் உங்கள் பிள்ளைக்கு பகல்நேரத்தில் தூக்கம் ஏற்படும். நடத்தையில் பெரிய மாற்றம் காணப்படும். வகுப்பறையில் அவர்களின் கவனத்தை பாதிக்கும். உங்கள் குழந்தைக்கு இரவில் தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்சனை இருப்பதாக உணர்ந்தால் குழந்தை நல மருத்துவரை சந்தியுங்கள்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!