Gistak Media

Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?

இன்றைய மனிதர்களின் வாழ்க்கையில் காலை எழுந்ததும் முதலில் பார்க்கப்படும் பொருள் போன் மற்றும் இரவு தூங்குவதற்கு முன் கடைசியாக பயன்படுத்தும் பொருள் போன் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எப்போதும் போன் தேவைப்படும் என்ற சூழ்நிலை ஆனது தொடர்கிறது. ஸ்மார்ட்போன் என்பது மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பொருளாக ஆகிவிட்டது.

மெதுவாக பரவும் டிஜிட்டல் அடிமைத்தனம்

டோப்பமைன் ஆனது மனிதர்களின் மூளையின் வெகுமதி அமைப்பில் (reward system) முக்கிய பங்கு வகிக்கும் நரம்பியல் வேதியியல் பொருள் ஆகும். இது மனிதர்களின் மகிழ்ச்சி, உந்துதல், மற்றும் கவனத்தைத் தூண்டுவதற்கு உதவுகிறது. இந்த  தூண்டுதல்கள் எல்லாம் சரியான அளவில் இருந்தால் அது மனிதர்களுக்கு திருப்தி அளிக்கும். ஆனால் இந்த தூண்டுதல்களின் அளவு  அதிகரிக்கும்போது அளவுக்கு அதிகமாக வெளிப்பட்டு அடிமைத்தனம் ஏற்படுகிறது மற்றும்​ மனச்சோர்வு, பதற்றம், தூக்கமின்மை, தனிமையை ஏற்படுத்துகிறது. ஸ்மார்ட்போனின் அறிவிப்புகள், லைக்ஸ், வீடியோக்கள் போன்றவை போதைப்பொருள் போன்று செயல்பட்டு ஸ்மார்ட்போனின் (Smartphone Usage Increases Dopamine Levels )அதிக பயன்பாட்டைத் தேவைப்படுத்துகின்றன. தொடர்ந்து பயன்படுத்தும்போது மூளையின் nucleus accumbens பகுதியில் டோப்பமைன்  வெளியிடப்படுகின்றன. மருத்துவர்கள் இது மெதுவாக டிஜிட்டல் அடிமைத்தனத்தை உருவாக்குகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மனித மூளையின் reward system-ஐ மாற்றி அமைக்கிறது

Smartphone Usage Increases Dopamine Levels - Gistakmedia

அளவுக்கு அதிகமான ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆனது மனித மூளையின் reward system-ஐ மாற்றி அமைக்கிறது. மனித மூளையில்  உள்ள டோப்பமைன் (Smartphone Usage Increases Dopamine Levels ) என்ற நரம்பு ரசாயனம் அதிகமாக உற்பத்தியாதவன் காரணமாக சாதாரண விஷயங்களில் மனித மூளைக்கு மகிழ்ச்சி கிடைக்காது. எப்போதும் போன் வேண்டும் என்ற நிலை ஏற்படும். மனநல நிபுணர்கள், மற்றும் நரம்பியல் மருத்துவர்கள்  இதையே Dopamine Burnout என்கிறார்கள்.

எதிர்காலத்தில் Digital Dopamine Disorder என்ற புதிய நோய் உருவாகலாம்

ஸ்மார்ட்போனின் (Smartphone Usage Increases Dopamine Levels ) அளவுக்கு அதிகமான பயன்பாடு ஆனது எதிர்காலத்தில் மனநலம் பிரச்சினைகள், சமூக தனிமை, உற்பத்தித் திறன் குறைவு போன்ற பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். மனநல நிபுணர்கள், நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் உலக சுகாதார ஆய்வாளர்கள் Digital Dopamine Disorder என்ற புதிய நோய் உருவாகலாம் என கணித்துள்ளனர்.

ஆரோக்கியமான போன் பயன்பாட்டை கடைப்பிடிக்கும் வழிகள்

  • குறிப்பிட்ட மணி நேரம் ஃபோனை விலக்கி டிஜிட்டல் டீடாக்ஸ் செய்வதனால் டோப்பமைன் சமநிலை பெறும்.
  • யோகா, தியானம், மற்றும் புத்தக வாசிப்பு மூலம் செரடோனினை அதிகரிக்க வேண்டும்.
  • உணவு நேரத்தில் போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
  • குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தல்.  மகிழ்ச்சியான பேச்சு மற்றும் செயல்கள் மூலம் ஆக்ஸிடாஸினை அதிகரிக்க செய்யலாம்.
  •  உடற்பயிற்சி செய்வதன் மூலம் தவிர்க்கலாம்.
  •  Social media apps குறைக்கலாம்.
  •  Screen time tracker பயன்படுத்தலாம்.
  •  Notification off செய்யலாம்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top