Snoring Lab : குறட்டை பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது (Snoring Lab)
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையை தொடர்ந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் குறட்டை பிரச்னையை தீர்ப்பதற்கான ஆய்வகம் (Snoring Lab) ஒன்று தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
நிம்மதியைக் கெடுக்கும் குறட்டை சத்தம்
மனிதர்களுக்கு தூக்கத்தில் குறட்டை வரும். அந்த குறட்டை சத்தம் நார்மலாக இருந்தால் அருகில் தூங்குபவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. அந்த குறட்டை சத்தம் அளவுக்கு அதிகமாக வரும்போது அருகில் தூங்குபவர்களுக்கு மற்றும் மற்றவர்களுக்கு எரிச்சல் தரும். மேலும் குறட்டை சத்தம் மற்றவர்களைத் தூங்க முடியாத தொந்தரவுக்கும் ஆளாக்கும். வாழ்க்கையில் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளை குறட்டை விடும் பலரும் சந்திக்கின்றனர். குறட்டை விடுபவர்கள் மிகுந்த மன உளைச்சல் மற்றும் வெளியில் சொல்ல முடியாத கூச்சத்துக்கும் ஆளாகிறார்கள். ஒருவருடைய நிம்மதியைக் கெடுக்கக் கூடியதாக குறட்டை அமைகிறது. இந்நிலையில் குறட்டை பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆய்வகம் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படுகிறது.
Snoring Lab - தஞ்சாவூர் புதிய ஆய்வகம் குறித்து மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் உரை
தஞ்சாவூர் புதிய ஆய்வகம் குறித்து மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன், “அதிநவீன பிரான்கோஸ்கோபி (Bronchoscopy) என்கிற மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவியுடன் கூடிய உறக்க ஆய்வகம் (Snoring Lab) ஆனது தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் தொடங்கப்பட்டுள்ளது. உடல் பருமன் காரணமாக நிறையப் பேருக்கு குறட்டைச் சத்தம் வரும். மேலும் தொண்டையில் சதை வளருதல் காரணமாகவும் வரும். இதனால் அவர்களுக்கு தூக்கமின்மை நோய் ஏற்பட்டு அவர்களது பகல் நேரச் செயல்பாடு குறைதல், ரத்த அழுத்தம், மற்றும் சர்க்கரை சத்து பிரச்சனைகள் உருவாகும்.
உடலில் ஏற்படக்கூடிய இந்த மாற்றங்களைக் கண்காணிப்பதற்கான பரிசோதனைக் கூடமாக இந்த உறக்க ஆய்வகம் ஆனது செயல்படும். குறட்டை வரும்போது உடலில் ஏற்படும் மாற்றம், ஆக்ஸிஜன் அளவு குறைவது மற்றும் இதயத்தில் மாறுபாடு போன்றவற்றை 6 மணி நேரம் வரை பதிவு செய்யப்படும். ஒருவர் தூங்கும் போது மட்டுமே பரிசோதனை செய்யப்படும். அதனால் ஒரு நாளைக்கு ஒருவர் மட்டுமே பரிசோதிக்கப்படுவர். ஆய்வகத்தில் பரிசோதனை செய்து எதனால் குறட்டை வருகிறது என்பதை அறிந்து, பரிசோதனை முடிவை வைத்து முறையான சிகிச்சை அளிப்பதன் மூலம் குறட்டையிலிருந்து தீர்வுக்கு வழி காணலாம். இந்தப் பரிசோதனை இரவு நேரத்தில் தூங்கும்போது மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!