Solar Eclipse 2027 : 100 வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் சூரிய கிரகணம் நிகழ போகிறது எப்போது தெரியுமா?
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது நிகழும் வானியல் நிகழ்வுதான் சூரிய கிரகணம் ஆகும். இந்த சமயத்தில் சந்திரன் சூரியனின் ஒளியை பூமியின் மீது படவிடாமல் சூரியனை மறைக்கிறது, இந்நிகழ்வு தான் சூரிய கிரகணமாகும். இந்த சூரிய கிரகணம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி 2027-ம் ஆண்டு (Solar Eclipse 2027) நிகழயுள்ளது. மேலும் இந்த சூரிய கிரகணம் கிட்டத்தட்ட 6 நிமிடங்கள் வரை வானத்தையும் பூமியின் சில பகுதிகளையும் இருளாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த சூரிய கிரகணம் எங்கெல்லாம் தெரியும்
இந்த சூரிய கிரகணம் அட்லாண்டிக் பெருங்கடல், வடகிழக்கு லிபியா, வடக்கு மொராக்கோ, ஜிப்ரால்டர் ஜலசந்தி, சவுதி அரேபியா,தெற்கு ஸ்பெயின், எகிப்து, சூடான், ஏமன் உட்பட பல நாடுகளில் தெரியும் என விஞ்ஞானிகள் (Solar Eclipse 2027) தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய பெருங்கடலில் இந்த சூரிய கிரகணம் மங்கலாக தெரியும் எனவும், இது போன்ற கிரகணம் வரும் 2114-ம் ஆண்டு வரை மீண்டும் நிகழாது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன் முதல்முறையாக 7 நிமிடம் 28 வினாடி என்ற கால அளவில் மிக நீண்ட முழு சூரிய கிரகணம் கி.மு 740-ல் தான் நிகழ்ந்தது என கூறப்படுகிறது. அதன் பிறகு தற்போது வரவிருக்கும் இந்த சூரிய கிரகணம் தான் இரண்டாவது பெரிய கிரகணம் என்றும் உலகின் ஒரு சில பகுதிகளில் 6 நிமிடங்களுக்கு இருளை ஏற்படுத்தும் என்றும் வானியல் மையம் தெரிவித்துள்ளது.
ஏன் ஆறு நிமிடங்கள் நீடிக்கும் (Solar Eclipse 2027)
இந்த சூரிய கிரகணத்தின் நீடிக்கப்பட்ட காலத்திற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன.
- சூரியனை சுற்றியுள்ள நீள்வட்டப் பாதையில், ஒரு கோள் சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் இது அஃபெலியன் புள்ளி என்று அழைக்கப்படுகிறது. இதனால் சூரியன் பூமியிலிருந்து சிறியதாக தோன்றும்.
- சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருப்பதால் அது பெரியதாக தோன்றும்.
- சந்திரனின் நிழல் பூமத்திய ரேகையின் மீது மெதுவாக விழுந்து விரிவடைந்து, இருளின் காலத்தை நீடிக்கும்.
மேலும் வரும் ஆகஸ்ட் 2027-ம் ஆண்டு நிகழும் இந்த சூரிய கிரகணம் தான் இந்த 21-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும். இந்த நிகழ்வுக்காக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!