T20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின், இந்தியா vs தென்னாப்பிரிக்கா போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை (South Africa Beat India) தழுவியது. இது T20 உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா எடுத்த பெரிய ரன் வித்தியாச தோல்வி ஆகும். இந்த தோல்வி ஆனது இந்தியாவின் சூப்பர் 8 பயணத்தை கடினமாக்கி உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் அதிரடி ஆட்டம்
தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்திலேயே தென்னாப்பிரிக்கா அணி பவர்ப்ளேவில் 60 ரன்களை எடுத்து இந்திய பந்துவீச்சாளர்களை கடுமையாக தாக்கியது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஜோடி ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி துல்லியமான ஷாட்களால் விரைவாக ஸ்கோர் செய்தனர். தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியின் மிகப்பெரிய பின்னடைவு (South Africa Beat India)
188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டது. தொடக்க வீரர் 2 ரன்களில் அவுட் ஆனார். ஆரம்பமே சரியில்லை மிகவும் அதிர்ச்சி அளித்தது. இந்திய வீரர்கள் பெரிய ஷாட்கள் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்ததால் இந்திய அணியின் ரன் வேகம் சரிந்தது. குறிப்பாக அபிஷேக் சர்மா (15), மற்றும் சூர்யகுமார் யாதவ் (18) விரைவில் அவுட் (South Africa Beat India) ஆகியதால் ரன் ரேட் சீர்குலைந்தது. தொடர்ந்து 3 ஓவர்களில் இந்தியா 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. சரியான கூட்டணிகள் அமையாமல் ஒவ்வொரு வீரரும் தனித்தனி முயற்சியால் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது.
இந்திய அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்கள் என்ன?
- தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பந்துவீச்சு,
- இந்திய அணியின் தொடக்க இழப்புகள், இஷான் கிஷன் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானது இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.
- பவர் பிளே மற்றும் நடுப்பகுதியில் ஏற்பட்ட அதிக விக்கெட் இழப்புகள்.
- சரியான கூட்டணிகள் (South Africa Beat India) அமையாமல் ஒவ்வொரு இந்திய அணி வீரரும் தனித்தனி முயற்சியால் ஆட்டமிழந்தது.
- இந்திய அணியின் பந்துவீச்சில் யாருக்கும் முழுமையான கட்டுப்பாடு இல்லாதது.
- தென்னாப்பிரிக்கா அணியின் சிறப்பான பேட்டிங். டேவிட் மில்லர் மற்றும் டெவால் பிரெவிஸ் ஆகியோரின் சிறப்பான பேட்டிங் மற்றும் ரன் குவிப்பு.
இந்தியா அடுத்த சூப்பர் 8 போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்
இந்த தோல்வி ஆனது இந்திய அணிக்கு ஒரு பெரிய எச்சரிக்கை ஆகும். இந்த தோல்வியால் இந்தியாவின் நெட் ரன் ரேட் ஆனது மிகவும் (South Africa Beat India) பாதிக்கப்பட்டது. இந்திய அணிக்கு தவறுகளுக்கு இடமில்லாத ஒரு கூட்டு செயல்பாடு அவசியம். நம்பிக்கையான பேட்டிங், துல்லியமான பந்துவீச்சு, ஒவ்வொரு ஓவரும், ஒவ்வொரு விக்கெட்டும் முக்கியம் என்ற இவையே இந்திய அணியின் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிக்கான சிறந்த செயல்பாடு ஆகும். இந்திய அணி தற்போது அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால், இனி அடுத்து வருகின்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அடுத்து வருகின்ற ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி ஆனது பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.