Southern Railway Apprentices Recruitment 2025 : தெற்கு இரயில்வேயில் 3,518 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியன் இரயில்வே இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனமாக உள்ளது. லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றக்கூடிய இந்த இரயில்வே துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களை இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நிரப்பி வ்ருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள அப்ரண்டிஸ் (Southern Railway Apprentices Recruitment 2025) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி, வயது வரம்பு, எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
Southern Railway Apprentices Recruitment 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
தெற்கு இரயில்வேயில் காலியாக உள்ள இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு மொத்தம் 3,518 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
தெற்கு இரயில்வேயில் காலியாகவுள்ள ஃபிட்டர், பெயிண்டர் மற்றும் வெல்டர் பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு முடித்தவர்களும், மெடிக்கல் லேப்டரட்டரி டெக்னிஷியன் (ரேடியோலாஜி, கார்டியாலஜி) பதவிக்கு 12-ம் வகுப்பு முடித்தவர்களும், எலக்ட்ரானிக் மெக்கானிக், எலக்ட்ரிஷியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ITI முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
தெற்கு இரயில்வேயில் இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு 15 வயது முதல் 24 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், அரசு விதிகளின்படி SC/ST பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு (Southern Railway Apprentices Recruitment 2025) மூன்று ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
தெற்கு இரயில்வேயில் இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபருக்கு ஒரு வருடம் 3 மாத காலம் பயிற்சியுடன் மாதம் ரூ.7000/- ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
தெற்கு இரயில்வேயில் இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
தெற்கு இரயில்வேயில் இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினர்க்கு ரூ.100 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் இல்லை.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
தெற்கு இரயில்வேயில் இந்த அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வரும் 25.09.2025 கடைசி நாளாகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!