Southern Railway Recruitment 2024 : ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு | 2250 பணியிடங்கள்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், ரயில்வே பாதுகாப்புத் துறை, ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை (Southern Railway Recruitment 2024) ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
Southern Railway Recruitment 2024 - பணியிட விவரங்கள் :
பணியிட விவரம் :
- சப்-இன்ஸ்பெக்டர்கள் – 250
- கான்ஸ்டபிள்கள் – 2000
இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் இரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படை (RPSF) ஆகிய இரண்டு பிரிவுகளில் தகுதியுடையவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
மொத்த பணியிடங்கள் : 2250
கல்வித்தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பதவிக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பதவிக்கு 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியிடங்களில் 10 சதவீதம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும், 15 சதவீதம் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு : சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தி அடைந்து 25 வயது மிகாமல் இருக்க வேண்டும். கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்த அறிவிப்பில் வயது வரம்பில் தளர்வு குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை : இந்த பணிக்கு (Southern Railway Recruitment 2024) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை மூன்று தகுதித் தேர்வுகளின் அடிப்படையில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கணினி தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையங்கள் போன்ற முழுமையான விவரங்களுக்கு https://indianrailways.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!