Gistak Media

Special Camps To Issue Lost Certificates : சான்றிதழ் வெள்ளத்தில் போயிடுச்சா?

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்களை பொதுமக்கள் எளிதாகப் பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் (Special Camps To Issue Lost Certificates) என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் :

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று ‘மிக்ஜாம்’ புயலாக மாறியது. இந்த புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. குறிப்பாக சென்னையில் பலத்த காற்று வீசியது மட்டுமின்றி, இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்த மழையால், ஏரி குளங்கள் நிரம்பி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் சென்னையில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதேபோல் பெரும்பாலான கடைகள், மருந்தகங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். மக்கள் பலரும் வேலைக்குச் செல்ல முடியாமல் பணமின்றி தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களை படகு மூலம் தமிழக அரசு வழங்கி வந்த நிலையில், அவை எல்லா பகுதிகளையும் சென்று சேரவில்லை. சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில பிரபலங்களும் உதவிகளை செய்தனர். பல இடங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினாலும், இன்னும் சில இடங்களில் மக்களின் வாழ்வாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருக்கிறது.

Special Camps To Issue Lost Certificates :

இந்நிலையில், புயலால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சான்றிதழ்களை பொதுமக்கள் எளிதாகப் பெற சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் (Special Camps To Issue Lost Certificates) என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றை மீண்டும் பெறுவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் இந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் (Special Camps To Issue Lost Certificates) என செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், மிக்ஜாம் புயலால் சென்னை மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து, கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு சார்பில் பல்வேறு மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை வெள்ளத்தால் அரசு ஆவணங்களான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி பொது மக்களுக்கு இலவசமாக. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில் 11/12/2023 (திங்கட்கிழமை) அன்றும், சென்னை மாவட்டத்தில், சென்னை கோட்ட அலுவலகங்களில் வருகின்ற 12/12/2023 (செவ்வாய்க்கிழமை) அன்றும் சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்படும். மேற்கண்ட சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்காக இ-சேவை மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top