Squash World Cup 2025 : ஸ்குவாஷ் உலகக் கோப்பை.. முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா..!
5வது ஸ்குவாஷ் உலகக் கோப்பை ஆனது டிசம்பர் 9-ல் தொடங்கி டிசம்பர் 14 வரை நடைபெற்றது. இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடரில் ஜப்பான், இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாங்காங், சீனா, எகிப்து, மலேசியா, தென்கொரியா, போலந்து, பிரேசில், சுவிட்சர்லாந்து என மொத்தம் 12 நாட்டு அணிகள் பங்கு பெற்றன. இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஹாங் காங் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை (Squash World Cup 2025) வென்றுள்ளது.
ஸ்குவாஷ் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா மகுடம் சூடியது
இந்தியா தர வரிசையில் முதலிடத்தில் இருந்த ஹாங்காங் மற்றும் சீனாவை வீழ்த்தி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஸ்குவாஷ் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா ஆனது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, எகிப்து ஆகிய மூன்று நாடுகளுக்குப் பிறகு கோப்பையை வென்ற நான்காவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இதுவரை ஐந்து முறை ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் ஆனது நடைபெற்றுள்ளது. சென்னையில் இத்தொடர் தொடர்ச்சியாக மூன்று முறை நடைபெற்றுள்ளது. விளையாட்டு உலகில் சென்னை ஆனது முக்கிய கவனத்தை பெற்று வருகின்றது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் தோற்கவில்லை. லீக் சுற்றில் சுவிட்சர்லாந்து மற்றும் பிரேசிலை இந்திய அணி ஆனது தலா 4-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
5-வது ஸ்குவாஷ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி
இதன் இறுதிப் போட்டி ஆனது கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும் மற்றும் நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடைபெற்றது. தமிழ்நாடு அரசே இதன் இறுதிப் போட்டிக்கு ஸ்பான்சர் செய்தது. இந்த உலகக் கோப்பையில் 3 அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளாக மொத்தமாக உள்ள 12 அணிகள் பிரிக்கப்பட்டன. ஸ்விட்சர்லாந்து மற்றும் பிரேசில் அணிகளோடு இந்திய அணி பி பிரிவில் இடம்பெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு தேர்வு பெற்றன.
இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி ஹாங் காங் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியா ஆனது ஹாங்காங் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் ஹாங் காங் வெள்ளிப் பதக்கமும், அரையிறுதியில் தோற்ற ஜப்பான் மற்றும் எகிப்து அணிகள் வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளன.
தொடரும் இந்திய அணியின் வெற்றிகள் (Squash World Cup 2025)
2023 ஆம் ஆண்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெண்கலம் வென்றது. அதன் பிறகு இந்தியாவுக்கு இந்த வெற்றி ஆனது முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை ஆகும். இதன் மூலம் விளையாட்டு உலகில் இந்தியா முக்கிய கவனத்தை பெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியிலும் தோற்கவில்லை. இந்த தொடரில் இந்திய அணி ஆனது சுவிட்சர்லாந்து மற்றும் பிரேசிலை தலா 4-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. கலப்பு அணிகள் போட்டியில் இந்திய அணி ஆனது காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவையும் மற்றும் அரையிறுதியில் 2 முறை வென்ற எகிப்தையும் தலா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியை பாராட்டி வாழ்த்துக்கள் ஆனது குவிந்து வருகின்றன.
இந்தியாவை சாம்பியன் ஆக்கிய சிறந்த வீரர்கள்
சென்னையை சேர்ந்த 39 வயதான சீனியர் ஜோஷ்னா சின்னப்பா, புது டெல்லியைச் சேர்ந்த 17 வயதேயான அனாஹத் சிங், தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 வயதான வேலவன் செந்தில்குமார் இந்தியாவை சாம்பியன் ஆக்கிய முக்கியமான சிறந்த வீரர்கள். சீனியர் ஜோஷ்னா சின்னப்பா 2013-ம் ஆண்டு அர்ஜுனா விருது வென்றவர் மற்றும் 2024-ல் பத்மஶ்ரீ பட்டம் பெற்றவர். மேலும் ஆசியன் கேம்ஸில் 5 பதக்கங்களும் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் 2 பதக்கங்களும் வென்றவர். புது டெல்லியைச் சேர்ந்த அனாஹத் சிங் 14 வயதிலேயே இந்தியாவுக்காக காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றவர். 2023-ம் ஆண்டு நடந்த ஆசியன் கேம்ஸில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றவர். வேலவன் செந்தில்குமார் ஆண்கள் பிரிவில் இப்போது தேசிய சாம்பியன். இவர், 2025 ஆசியன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். 2028-ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் விளையாட்டு ஆனது சேர்க்கப்பட்டுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!