மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய ஆயுத காவல் படையில் காலியாக உள்ள 827 பணியிடங்களை நிரப்புவதற்கான விரிவான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்குக் கிடைத்துள்ள அரிய வேலைவாய்ப்பு ஆகும்.
பல்வேறு பிரிவுகளில் உள்ள கான்ஸ்டபிள் காலிபணியிடங்களின் விவரங்கள்
- ஓட்டுநர் பணி (Driver – ஆண்களுக்கு மட்டும்) – 553 இடங்கள்
- தையல்காரர் பணி (Tailor) – 41 இடங்கள்
- சலவையாளர் பணி (Washerman) – 74 இடங்கள்
- முடிதிருத்துபவர் பணி (Barber) – 43 இடங்கள்
- தோட்டக்காரர் பணி (Gardener) – 41 இடங்கள்
- கால்நடை பணி (Veterinary) – 34 இடங்கள்
- செருப்பு தைப்பவர் பணி (Cobbler) – 25 இடங்கள்
- தச்சர் பணி (Carpenter) – 07 இடங்கள்
- சர்வார் பணி (Sarvar) – 03 இடங்கள்
- தண்ணீர் கொண்டு செல்பவர் பணி (Water Carrier) – 05 இடங்கள்
- நர்சிங் உதவியாளர் பணி (Nursing Assistant) – 01 இடம்
11 வகையான பிரிவுகளில் மொத்தமாக 827 காலிபணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி தேவைகள் மற்றும் அனுபவ தேவைகள்
அனைத்துப் பிரிவுகளின் பணியிடங்களுக்கும் அடிப்படைத் தகுதியாக 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பணிக்கும் விண்ணப்பதாரர்கள் கூடுதலான தகுதிகள் மற்றும் அனுபவங்களை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- ஓட்டுநர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், செல்லுபடியாகும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் (HMV) விண்ணப்பதாரர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- கால்நடை பணிக்கு 10-ஆம் வகுப்பில் அறிவியல் ஒரு பாடமாக இருந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பதாரர் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- நர்சிங் உதவியாளர் பணிக்கு 10-ஆம் வகுப்பில் அறிவியல் பாடம் அவசியம். விண்ணப்பதாரர் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சங்கம் அல்லது ரெட் கிராஸ் சொசைட்டியின் முதலுதவி சான்றிதழ் மற்றும் ஓராண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
- இதர வகையான வணிகப் பணிகளுக்கு (தோட்டக்காரர், சலவையாளர், மற்றும் தையல்காரர் போன்றவை)
- 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.(அல்லது)
- ஓராண்டு ITI சான்றிதழ் பெற்றவராக மற்றும் ஓராண்டு அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் (அல்லது)
- ITI-யில் 2 வருட டிப்ளோமா பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேலும் இந்த விண்ணப்பதாரர்கள் அந்தந்தத் துறை சார்ந்த திறன் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- தச்சர் பணிக்கு 10-ஆம் வகுப்புடன் 2 வருட அனுபவம் அல்லது சம்பந்தப்பட்ட ITI சான்றிதழ்/டிப்ளோமா பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமானது நிலை-3 (Level-3) ஊதிய விகிதத்தின்படி வழங்கப்படும்.
- குறைந்தபட்ச சம்பளமாக ரூ. 21,700 வழங்கப்படும்.
- அதிகபட்ச சம்பளமாக ரூ. 69,100 வழங்கப்படும்.
வயது வரம்பு மற்றும் வயது தளர்வு விவரங்கள்
- கான்ஸ்டபிள் (கால்நடை, ஓட்டுநர், மற்றும் நர்சிங் உதவியாளர் பணியிடங்களுக்கு) – 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- கான்ஸ்டபிள் (தச்சர் பணிக்கு) – 18 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இதர வணிகப் பணிகள் (சலவையாளர், தோட்டக்காரர், மற்றும் முடிதிருத்துபவர் பணியிடங்களுக்கு) – 18 முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு விவரங்கள்
மத்திய அரசு விதிகளின்படி பின்வரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
- SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு உண்டு.
- OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வுகளின் அடிப்படையில் தகுதி செய்யப்படுவார்கள்
- கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (CBT – Computer Based Test)
- திறன் தேர்வு (Skill/Trade Test) – குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும்.
- உடல் தகுதித் தேர்வு (PET – Physical Efficiency Test)
- உடல் தரத் தேர்வு (PST – Physical Standard Test)
- ஆவண சரிபார்ப்பு (Document Verification)
- விரிவான மருத்துவ பரிசோதனை (DME – Detailed Medical Examination)
- மறு ஆய்வு மருத்துவ பரிசோதனை (RME – Review Medical Examination)
விண்ணப்பக் கட்டண விவரங்கள்
- பொதுப்பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும்.
- பெண்கள், SC, ST மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விண்ணப்பக் கட்டண விலக்கு உள்ளது.
விண்ணப்பம் தொடர்பான முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 21.03.2026 முதல் 20.04.2026 வரை SSB-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ssb.gov.in/ அல்லது https://applyssb.com/SSB_CT_25/applicationIndex என்ற இணையதள பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.