-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
SSC Constable : எஸ்.எஸ்.சி-யில் 737 கான்ஸ்டபிள் (Driver) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது
மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களும் எஸ்.எஸ்.சி வாயிலாகவே நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், கான்ஸ்டபிள் (டிரைவர்) பணியிடங்களை நிர்ப்புவதற்கான அறிவிப்பினை தற்போது எஸ்.எஸ்.சி (SSC Constable) வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன?, சம்பள விவரம்?, வயது வரம்பு? உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
SSC Constable
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
மத்திய அரசில் காலியாக உள்ள இந்த கான்ஸ்டபிள் (ஓட்டுநர் – ஆண்) பணியிடங்களை நிரப்புவதற்கு மொத்தம் 737 காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
மத்திய அரசின் இந்த கான்ஸ்டபிள் (Driver) பணியிடங்களுக்கு கல்வி தகுதியை பொறுத்தவரை, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், அதேபோல் விண்ணப்பதாரர்கள் ஹெவி (கனரக) வாகனங்கள் ஓட்டுவதற்கு உரிய லைசன்ஸ் (Heavy Motor Vehicle Driving Licence – HMV DL) வைத்திருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
மத்திய அரசின் இந்த கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணியிடங்களுக்கு வயது வரம்பை பொறுத்தவரை, 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் (02.07.1995-க்கு முன்பாகவோ 1.07.2004 பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது) விண்ணப்பிக்கலாம். மேலும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வயது உச்ச வரம்பில் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படுகிறது.
4.சம்பளம் (Salary)
மத்திய அரசின் இந்த கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் மாதம் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை சம்பளம் வழங்கப்படும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
மத்திய அரசின் இந்த கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணியிடங்களுக்கு தேர்வு முறையை பொறுத்தவரை, கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு (Physical Eligibility Test), சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
மத்திய அரசின் இந்த கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணியிடங்களுக்கு தேர்வுக்கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். மேலும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது. அதேபோல் தேர்வு மையங்களை பொறுத்தவரையில் தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
மத்திய அரசின் இந்த கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக வரும் 15.10.2025 தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் தேர்வானது டிசம்பர் 2025 மற்றும் 2026 ஜனவரி மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!