SSC Gd Constable : எஸ்.எஸ்.சி-யில் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது
ஸ்டாப் செலெக்ஷன் கமிஷன் (Staff Selection Commission) எனப்படும் எஸ்.எஸ்.சி மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த அறிவிப்புகளில் ஒன்றான 7,565 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப தற்போது எஸ்.எஸ்.சி அறிவிப்பு (SSC Gd Constable) வெளியிட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், சம்பளம், கல்வி தகுதி என்ன? வயது வரம்பு பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
SSC Gd Constable
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள ஆண் கான்ஸ்டபிள் (Executive) பணியிடங்களை நிரப்புவதற்கு 5,069 பணியிடங்களும், பெண் கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கு 2,496 பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 7,565 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு கல்வி தகுதியை பொறுத்தவரை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.வயது தகுதி (Age)
மத்திய அரசின் இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு வயது வரம்பை பொறுத்தவரை, 21.10.2025 தேதியின் படி 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்காலம் (SSC Gd Constable) எனவும், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், பொதுப்பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என எஸ்.எஸ்.சி தெரிவித்துள்ளது.
4.சம்பளம் (Salary)
மத்திய அரசின் இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை வழங்கப்படும் என அறிவிப்பில் எஸ்.எஸ்.சி தெரிவித்துள்ளது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
மத்திய அரசின் இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தேர்வு முறையை பொறுத்தவரை முதலில் கணினி வழியிலான ஆன்லைன் தேர்வில் வெற்றி (SSC Gd Constable) பெற்றவர்கள், உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். பின்னர் PE&MT டெஸ்ட் மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவை அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மேலும் முன்னாள் ராணுவத்தினர், எஸ்.சி/எஸ்.டி, பெண்கள் உள்ளிட்டோருக்கு கட்டணம் இல்லை.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வரும் 21.10.2025 கடைசி நாளாகும். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்களை திருத்த 29.10.2025 முதல் 31.10.2025 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கணினி வழியிலான ஆன்லைன் தேர்வானது டிசம்பர் அல்லது ஜனவரி 2026-ல் நடைபெறும் என உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!