SSC GD Recruitment : 26,146 காவலர் பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய ரிசர்வ் போலீஸில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை (SSC GD Recruitment) நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் STAFF SELECTION COMMISSION (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காவலர் ஆக வேண்டும் என நினைப்பவர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் Central Reserve Police Force (CRPF) மற்றும் Border Security Force (BSF), Central Industrial Security Force (CISF), Central Armed Police Forces (CAPF) Secretariat Security Force (SSF), Indo Tibetan Border Police (ITBP), Sashastra Seema Bal ( SSB ), Rifleman (General Duty) In Assam Rifles (AR) ஆகிய பிரிவுகளில் மொத்தமாக 26,146 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
SSC GD Recruitment :
- மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : 26,146
துறைவாரியாக காலியிடங்களின் விவரம்
- BSF – 6174 (ஆண்கள் – 5211, பெண்கள் – 963)
- CISF – 11025 (ஆண்கள் – 9913, பெண்கள் – 1112)
- CRPF – 3337 (ஆண்கள் – 3266, பெண்கள் – 71)
- SSB – 635 (ஆண்கள் – 593, பெண்கள் – 42)
- ITBP – 3189 (ஆண்கள் – 2694, பெண்கள் – 495)
- AR – 1,490 (ஆண்கள் – 1448, பெண்கள் – 42)
- SSF – 296 (ஆண்கள் – 222, பெண்கள் – 74)
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த கான்ஸ்டபிள் (Constable And Sepoy) பதவிகளுக்கு (SSC GD Recruitment) 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- வயதுத் தகுதி (Age) : 01.01.2024 தேதி வரை 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த கான்ஸ்டபிள் (Constable And Sepoy) பதவிகளுக்கு (SSC GD Recruitment) ரூ.21,700-69,100/- வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு (SSC GD Recruitment) கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வானது 13 வட்டார மொழிகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழி தேர்வானது 160 மதிப்பெண்களுக்கு 1 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் (General English) பொது அறிவு (General Awareness) திறனறிதல் (General Intelligence & Reasoning) கணிதம் (Numerical Aptitude) ஆகிய நான்கு பகுதிகளில் இருந்து தலா 20 கேள்விகள் என மொத்தம் 80 கேள்விகளுக்கு தேர்வு நடைபெறும்.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு (SSC GD Recruitment) விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.100 இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 31.12.2023 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விவரங்களுக்கு : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_24112023.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!