Gistak Media

SSC Job Vacancy 2026 : மத்திய அரசில் 3,003 காலிப்பணியிடங்கள்…

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC) இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் உள்ள 3003 பணியிடங்களை (SSC Job Vacancy 2026) நிரப்புவதற்காக SSC Selection Post Phase 14 – 2026 என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் காலிப்பணியிட விவரங்கள்

பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு வாரியான காலிப்பணியிட விவரங்கள் (SSC Job Vacancy 2026) பின்வருமாறு 

  • பொதுப்பிரிவு பிரிவினர் (UR) – 1534
  • இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (OBC) – 667
  • பட்டியல் சாதி பிரிவினர் (SC) – 346
  • பழங்குடி பிரிவினர் (ST) – 185
  • பொருளாதார நிலையில் நலிந்த பிரிவினர் (EWS) – 271

பதவி விவரங்கள்

  • Workshop Assistant.
  • Office Attendant.
  • Laboratory Attendant / Field cum Laboratory Attendant.
  • Field Attendant.
  • Boiler Attendant & Technical Operator.
  • Library Clerk.
  • Multi-Tasking Staff (MTS).
  • Canteen Attendant.
  • Cook & Dhobi.
  • Medical Attendant / Lady Medical Attendant.
  • Staff Car Driver.
  • Binder & Sanitary Inspector.
  • Photographer & Photo Artist.

SSC Job Vacancy 2026 :கல்வித் தகுதி குறித்த விவரங்கள்

பதவிகளைப் பொறுத்து கல்வித் தகுதிகளின் தேவை மாறுபடும். அதனால் பொதுவாக பின்வரும் கல்வித் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்.
  • 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள். (குறிப்பாக Stenographer, Store Clerk, Personal Assistant போன்றவற்றிற்கு)
  • பட்டப்படிப்பு பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றவர்கள். (குறிப்பாக Junior Engineer, Scientific Assistant, Research Assistant போன்றவற்றிற்கு)

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு மற்றும் வயது தளர்வு விவரங்கள்

பொதுவாக அனைத்து காலிப்பணியிடங்களுக்கும் 18 முதல் 30 அல்லது 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைகளின்படி உள்ள வயது தளர்வுகள் வழங்கப்படும். வயது தளர்வு விவரங்கள் பின்வருமாறு. 

  • SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படுகிறது.
  • OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படுகிறது.
  • மாற்றுத்திறனாளிகள் (PwBD) பிரிவினருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படுகிறது.
SSC Job Vacancy 2026 - GISTAK media

சம்பளம் சம்பந்தப்பட்ட விவரங்கள்

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு பதவிக்கு ஏற்ப சிறப்பான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பளமாக ரூ. 18,000-மும் அதிகபட்ச சம்பளமாக ரூ. 1,12,400-மும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

தேர்வு செய்யப்படும் முறைகள்

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறைகள் பின்வருமாறு. 

  1. 200 மதிப்பெண்களுக்கான கணினி வழித் தேர்வு (Computer Based Examination – CBE) தேர்வு நடத்தப்படும்.
  2. சுருக்கெழுத்தாளர் அல்லது தட்டச்சர் போன்ற குறிப்பிட்ட பதவிகளுக்கு மட்டும் திறன் தேர்வு (Skill Test) நடத்தப்படும்.
  3. அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) நடத்தப்படும்.

தமிழகத்தில் தேர்வு நடைபெறும் மையங்கள்

(SSC Job Vacancy 2026) தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் ஊருக்கு அருகிலேயே தேர்வு எழுத வசதியாகப் கீழ்வரும் நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • சென்னை,
  • புதுச்சேரி,
  • வேலூர்
  • கோயம்புத்தூர்,
  • மதுரை,
  • சேலம்,
  • திருச்சி,
  • திருநெல்வேலி.

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 13.04.2026 தேதி முதல் 04.05.2026 வரை https://ssc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பொது/OBC பிரிவினர்கள் Rs. 100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். பெண்கள்/SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top