SSC Jobs 2024 : மத்திய அரசில் 968 ஜூனியர் என்ஜினியர் காலிப்பணியிடங்கள் டிப்ளமோ மற்றும் பி.இ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்...!
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC Jobs 2024) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வு வாரியம் எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது மத்திய நீர் ஆணையம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம், பொதுப்பணித்துறை, எல்லை சாலைகள் ஆணையம், உள்ளிட்ட மத்திய அரசின் துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (Junior Engineer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் என்ஜினியர் (SSC Jobs 2024 - Junior Engineer)
1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
மத்திய அரசில் இந்த ஜூனியர் என்ஜினியர் பிரிவுகளில் இருந்து Mechanical, Civil, Electrical And Quantity Surveying & Contracts ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 968 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
2. கல்வித் தகுதி (Educational Qualification)
இந்த ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Civil, Mechanical, Electrical ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் டிகிரி (UG)அல்லது டிப்ளமோ (Diploma) படித்திருக்க வேண்டும்.
3. வயதுத் தகுதி (Age)
இந்த ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களுக்கு 30 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். மேலும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. சம்பளம் (Salary)
இந்த ஜூனியர் என்ஜினியர் (Junior Engineer) தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35,400-1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த ஜூனியர் என்ஜினியர் (Junior Engineer) பணியிடங்களுக்கு இரண்டு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கணினி வழி தேர்வானது 3 மணி நேர கால அளவில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த தேர்வில் திறனறிதல் (General Intelligence & Reasoning) மற்றும் பொது அறிவு (General Awareness) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் இடம்பெறும்.
மேலும் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது கணினி வழித் தேர்வில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இதில் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பகுதியில் இருந்து 100 வினாக்கள் இடம்பெறும்.
6. விண்ணப்பிக்கும் முறை (Application Process)
இந்த ஜூனியர் என்ஜினியர் (Junior Engineer) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
7. விண்ணப்பக் கட்டணம் (Application Fees)
இந்த ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
8. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
ஜூனியர் என்ஜினியர் பணியிடங்களுக்கு 18.04.2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
9. மேலும் விவரங்களுக்கு
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/notice_28032024.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!