SSC Recruitment 2024 : 4187 எஸ்.ஐ காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணபிக்கலாம்
மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள (SSC Recruitment 2024) பல்வேறு பணியிடங்களுக்கு Staff Selection Commission (SSC) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் உதவி காவல் ஆய்வாளர் (Sub – Inspector) பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிகிரி படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் டெல்லி போலீஸில் (Delhi Police) 4187 காலிப்பணியிடங்கள் (SSC Recruitment 2024) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC Recruitment 2024 :
- காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy) : மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) 4001 காலிப்பணியிடங்களும் டெல்லி போலீஸ் (Delhi Police) 186 காலிப்பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 4187 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தகுதி (Educational Qualification) : இந்த இரண்டு பணியிடங்களுக்கும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (Age) : இந்த இரண்டு பணியிடங்களுக்கும் 01.08.2024 அன்று வரை 20 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பளம் (Salary) : இந்த Sub – Inspector பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் முறை (Selection Process) : இந்த இரண்டு பணியிடங்களுக்கும் கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் ஆங்கில மொழி அறிவு தேர்வு (English language & Comprehension) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி வழி தேர்வானது மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning), ஆங்கிலம் (General English), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும்.
- விண்ணப்பிக்கும் முறை (Application Process) : இந்த இரண்டு பணியிடங்களுக்கும் (SSC Recruitment 2024) விண்ணப்பிக்க https://ssc.gov.in/login என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் (Application Fees) : இந்த இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
- விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date) : இந்த Sub – Inspector பணியிடங்களுக்கு 28.03.2024 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விவரங்களுக்கு :
https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/final%20notice%20cpo%202024%2004.03.2024.pdf
என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!