SSC SI Recruitment 2025 : மத்திய ரிசர்வ் போலீஸில் 3,073 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!
டெல்லி காவல்துறை உள்பட மத்திய அரசு காவல் பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) நிரப்பி வருகிறது. அந்தவகையில் டெல்லி காவல் துறையில் காலியாக உள்ள சப் இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பணியிடங்களை (SSC SI Recruitment 2025) நிரப்ப எஸ்எஸ்சி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்.
SSC SI Recruitment 2025
1.காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள இந்த சப் இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்புவதற்கு பணியாளர் தேர்வு வாரியம் மொத்தம் 3,073 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது.
2.கல்வி தகுதி (Educational Qualification)
இந்த சப் இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு கல்வி தகுதி பொறுத்த வரையில், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் எதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் (Degree) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என எஸ்எஸ்சி தெரிவித்துள்ளது.
3.வயது தகுதி (Age)
இந்த சப் இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு வயது தகுதி பொறுத்தவரையில், 1.08.2025 தேதிப்படி 20 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் (அதாவது 2.08.2000 இருந்து 1.08.2005-க்குள் பிறந்தவர்கள்) விண்ணப்பிக்கலாம் எனவும், மேலும் அரசு விதிகளின்படி அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.சம்பளம் (Salary)
மத்திய அரசின் இந்த சப் இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு சம்பளத்தை பொறுத்த வரையில், 7வது ஊதிய குழுவின் அடிப்படையில் மாதம் ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
5.தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த சப் இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு தேர்வு முறையை பொறுத்த வரையில், முதலில் கணினி வழியிலான ஆன்லைன் தேர்வு (Computer-Based Test), உடல் தகுதி தேர்வு (Physical Test), மருத்துவ பரிசோதனை (Medical Exam) ஆகியவற்றின் அடிப்படையில் (SSC SI Recruitment 2025) தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களை பொறுத்த வரையில் தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை, திருச்சி, மதுரை, சேலம், கரூர், வேலூர், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.விண்ணப்ப கட்டணம் (Application Fees)
மத்திய அரசின் இந்த சப் இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
7.விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date)
இந்த சப் இன்ஸ்பெக்டர் (Sub-Inspector) பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 16.10.2025 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!