ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உலகின் சக்தி வாய்ந்த ராக்கெட் Starship சோதனை
எலான் மஸ்க்கின் Space X நிறுவனத்தின் “Starship” ராக்கெட் நேற்று சோதனை செய்யப்பட இருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சோதனைப் பயணம் இன்று (சனிக்கிழமைக்கு) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இதுவரை கட்டப்படாத மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஆக ஸ்பேஸ்எக்ஸ்-இன் Starship கருதப்படுகிறது. ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் நிறுவனம் கடந்த புதன்கிழமை, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் பிரமாண்டமான Starship ராக்கெட் சோதனைக்கு அனுமதி வழங்கியது. ஏப்ரல் மாதத்தில் நடந்த முதல் சோதனையின் போது ராக்கெட் வெடித்து சிதறியது. இந்த நிலையில் பல கட்ட மேம்படுத்தலுக்குப் பிறகு 2-வது முறையாக எப்.ஏ.ஏ சோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தனது X பக்கத்தில் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் கிரிட் ஃபின் ஆக்சுவேட்டர் மாற்றப் பட வேண்டும். அதனால் ஏவுதல் சனிக்கிழமைக்கு (18.11.2023) ஒத்திவைக்கப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
Starship ராக்கெட் சோதனை எப்படி இருக்கும்?
Starship ராக்கெட்டின் சோதனைப் பயணம் சுமார் 1.5 மணிநேரம் நடைபெறும். இது முழுமையாக பூமியின் சுற்றுப்பாதையில் நடத்தப்படும். அட்லாண்டிக், இந்திய மற்றும் பசிபிக் ஆகிய மூன்று பெருங்கடல்களைக் கடந்து, கிழக்கு நோக்கிய பாதையில் விண்கலம் ஹவாய் தீவு அருகே பாதுகாப்பாக தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல் சோதனையின் வெடித்து சிதறிய ராக்கெட்
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்ஷிப் சோதனையின் போது மெக்ஸிகோ வளைகுடாவில் ராக்கெட் வெடித்து சிதறியது. எஞ்சின் கோளாறு மற்றும் விண்கலம் பிரிந்து செல்வதில் ஏற்பட்ட பிரச்சனை ஆகியவற்றால் இந்த சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது.
சூப்பர் ஹெவி ராக்கெட்
‘நிலவு’ மற்றும் ‘செவ்வாய்’ போன்ற தொலைதூர பகுதிகளுக்கு பேலோடுகளையும், மனிதர்களையும் அழைத்து செல்வதற்கு Starship ராக்கெட் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் உயரமான ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த Starship விண்கலம் மற்றும் ‘சூப்பர் ஹெவி ராக்கெட்’ ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்டார்ஷிப் 100 பேர் வரை சுமந்து செல்லும். 150 மெட்ரிக் டன்கள் வரை சரக்குகளை ஏற்றி செல்ல முடியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் வடிவமைக்கப்படுகிறது. நாசா வரும் 2025-ம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்கு ஸ்டார்ஷிப் ராக்கெட் பயன்படுத்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!