Strawberry Moon : 2025-ம் ஆண்டின் ஸ்ட்ராபெரி நிலவு ஜூன் 11-ம் தேதி தோன்றுகிறது
2025-ம் ஆண்டின் ஸ்ட்ராபெரி நிலவு வரும் ஜூன் 11-ம் தேதி வானில் தோன்றும் என்று விஞ்ஞானிகள் (Strawberry Moon) கூறியுள்ளனர். மேலும் மற்ற முழு நிலவை விட, இது மிகவும் வித்தியாசமானது என்றும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ‘ஸ்ட்ராபெரி நிலவு’ தோன்றினாலும், அது ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக தெரியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அந்த வகையில் இந்த 2025-ம் ஆண்டு தோன்றும் முழு நிலவு மிகவும் வித்தியாசமாக அடிவானத்திலேயே முழு பிரகாசத்துடன் உதிக்க தொடங்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதான் வசந்த காலத்தின் கடைசி நிலவாகும்.
ஸ்ட்ராபெரி நிலவு (Strawberry Moon)
ஸ்ட்ராபெரி நிலவு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதால் இது ஸ்ட்ராபெரி நிறத்தில் இருக்கும் என்றும் நினைக்க வேண்டாம். அமெரிக்காவில் இந்த பௌர்ணமி நாளில்தான் ‘ஸ்ட்ராபெரி பழங்கள்’ விளைய தொடங்கும் என்பதால், அமெரிக்க பழங்குடியினர் இந்த பௌர்ணமிக்கு ஸ்ட்ராபெரி நிலவு என்று பெயர் வைத்துள்ளனர். மற்ற முழு நிலவை காட்டிலும், இந்த நிலவு அடிவானத்திலேயே பிரகாசமாக தோன்றுவதற்கு சில காரணங்கள் உள்ளன. ஒப்பீட்டளவில் இந்த பௌர்ணமி நிகழ்வின்போது, சூரியனிலிருந்து பூமி மிக நீண்ட தூரத்தில் இருக்கும். பூமி, சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றும் என்பதால் குறிப்பிட்ட சில நாட்களில் சூரியனுக்கு அருகிலும், குறிப்பிட்ட சில நாட்களில் சூரியனுக்கு தூரத்திலும் பூமி இருக்கும். இந்த சமயத்தில் பூமி தொலைவில் இருப்பதால், நிலவின் தொலைவும் சூரியனிலிருந்து தூரமாக இருக்கும்.
மேலும் நிலவு பூமியின் அடிவானத்திலிருந்து, உதிப்பதால் இயல்பான வெளிச்சத்தில் பிரகாசிக்க தொடங்கிவிடும். இந்த ஸ்ட்ராபெரி முழு நிலவின்போது கர்ப்பிணிகள் உணவு சாப்பிட கூடாது, வெளியே வரக்கூடாது, தண்ணீர் குடிக்க கூடாது போன்ற மூட நம்பிக்கைகளை நம்பாமல் அவர்கள் எப்போதும் போலவே தங்கள் வேலைகளை இயல்பாக செய்யலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஸ்ட்ராபெரி நிலவு அமெரிக்காவில் ஜூன் 11-ம் தேதியும், இந்தியாவில் ஜூன் 10-ம் தேதி (செவ்வாய் கிழமை) இரவு 7.30 மணி முதலே இதனை நாம் வெறுங்கண்ணால் பார்க்கலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!