-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
சருமத்தை கோடைக்காலத்தில் இருந்து பாதுகாக்க 8 வழிமுறைகள்
Summer Skin Care Tips in Tamil
Summer Skin Care Tips: நம் உடலில் நிறைய உறுப்புக்கள் இருக்கிறது இதில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் சருமம்தான். நம் உடலின் கழிவுகளை வெளித்தள்ளவும் இதற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இந்த சருமத்தின் நீட்டிப்பு மற்றும் தொடர்புதான் முடி மற்றும் நகங்கள்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்கிறானா என்பதை அவனுடைய சருமத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் பார்த்தோமேயானால் இந்த சருமத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறது. இயற்கையாகவே சருமத்தை பாதுகாக்கும் கவசங்கள் நம் உடலில் இருக்கிறது.
உடலின் வெப்ப நிலையை சமன்படுத்த தோலின் மேற்பகுதியில் முடிகள் மற்றும் வெளியில் உள்ள தட்ப வெப்பநிலையை சரிசெய்ய தோலின் உட்புறத்தில் கொழுப்புகளால் ஆன அடுக்குகள் அரண் போல அமைந்துள்ளது. மேலும் தோலில் சீபம் (எண்ணெய் சுரப்பிகள்), PH (தோலின் அமில தன்மை) போன்றவைகள் இயற்கையாகவே தோலை பராமரிக்கிறது. பருவ காலங்கள் மாறும்போது நம் தோலின் தன்மைகளிலும் மாற்றங்கள் ஏற்படும்.
குறிப்பாக குளிர் காலங்களிலும், கோடைக் காலங்களிலும் சருமத்தின் தன்மை மாற்றம் அடையும். PH என்னும் சருமத்தின் தன்மையானது காரத்தன்மை, அமிலத்தன்மை என்னும் வகைகளில் அமைந்துள்ளது. இதில் அதிக அமில தன்மையான (Highly Acidic) வெளியில் இருந்து ஏதேனும் ஊடுருவி சென்று எந்த விதமான தொற்றுகளும் ஏற்படுத்தி விடக்கூடாது என்று சருமத்தை பாதுகாக்கிறது. இந்த அமில தன்மையானது குறையும் போது சருமத்தில் காரத் தன்மை அதிகரிக்கிறது. காரத்தம்மை அதிகரிக்கும் போது சருமத்தில் மாற்றம் ஏற்பதுகிறது.
சருமங்களின் வகைகள் (Types of skin):
சாதாரண சருமம், எண்ணெய் சருமம், வறண்ட சருமம், காம்பினேஷன் சருமம், சென்சிடிவ் சருமம், பிக்மென்ட் சருமம் போன்ற வகைகளில் சருமங்களை பிரிக்கின்றனர். ஒவ்வொரு சருமமும் ஒவ்வொரு விதமான தன்மை கொண்டவை. தற்போதய சுற்றுப்புற சூழலுக்கு ஏற்பவும், பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்பவும் சருமம் பாதிக்கிறது.
இந்த பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள அந்தந்த சருமத்திற்கு ஏற்ற வகையில் ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு விதமான கிரீம், சீரம், லோஷன் போன்றவைகள் இருக்கிறது. இவற்றை பயன்டுத்தி கொள்ளாம். சரும ஆரோக்கியம் என்பது மேல்பூச்சாக பூசப்படுவதில் மட்டும் இல்லாமல் நாம் உட்கொள்ளும் உணவுகளில் அதிகம் நிறைத்திருக்கிறது.
உடலின் தன்மைக்கு ஏற்ப காய்கள், பழங்கள், பழசச்சாறு (Fruit Juice) மற்றும் குறிப்பிட்ட காய்ச்சாறுகளை (Vegetables Juice) உட்கொள்ளும் போது சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். கோடைக்காலத்தில் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் வழிமுறைகளை கையாளலாம்.
Top 8 Summer Skin Care Tips
- Summer Skin Care Tips 1: கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தோல் சேதம் அதிக அளவில் ஏற்படும் அதுவும் வறண்ட சருமம் உள்ளவர்கள் தங்களின் தோல் வறட்சி அடையாமல் இருக்க பாதுகாத்து கொள்ளவேண்டும். தினமும் காலையில் பாலாடையுடன், கஸ்தூரி மஞ்சளை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி குளிர்ந்த நீரால் கழுவலாம்.
- Summer Skin Care Tips 2: சாதாரண சருமம், காம்பினேஷன் சருமம் மற்றும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் கடலை மாவுடன், கஸ்தூரி மஞ்சள் பைத்தம்பருப்பு ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு பன்னீரில் குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவலாம்.
- Summer Skin Care Tips 3: வெயில் காலத்தில் உடலில் அதிகம் வியர்வை ஏற்படுவதால் உடல் துறுநாற்றம் மற்றும் வியர்க்குரு பிரச்சனைகள் சருமங்களில் தோன்றும் அவ்வாறு ஏற்படாமல் தடுக்க சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பைத்தம்மாவு, கஸ்தூரி மஞ்சள், காய்ந்த எலுமிச்சை தோல் போன்ற அனைத்தையும் சேர்த்து பொடி செய்து அவற்றை தினமும் உடலில் தேய்த்து குளிக்கலாம்.
- Summer Skin Care Tips 4: கோடைக் காலத்தில் ஏற்படும் வியர்வையால் தலை வறண்டு போகும் இதனால் முடிஉதிர்வும் ஏற்படும் இதனை தடுக்க தலையில் கற்றாழை களிம்பு, தயிர், பால் ஏடு, முட்டையின் வெள்ளை பகுதி போன்றவைகளை தலையில் ஊறவைத்து குளித்தால் தலை ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் முடி உதிர்வு பிரச்சனைகள் இருக்காது.
- Summer Skin Care Tips 5: வெயில் காலங்களில் சில விஷயங்களை தினசரி கடைபிடிக்க வேண்டும். வெயில் காலத்தில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். அதனால் குறைந்த பட்சம் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- Summer Skin Care Tips 6: பச்சை காய்கறிகள், கீரைகள், பழ வகைகள், போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு பழ சாறு ஆகியவை குடிப்பது அவசியம், ஏனென்றால் இதில் “வைட்டமின் சி” சத்து அதிகம் நிறைந்துள்ளதால். உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள உதவும். குறிப்பாக காரம் அதிகமாக உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
- Summer Skin Care Tips 7: வெயிலில் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் லோஷன் மற்றும் மாஷ்டுரைசர் கிரீம் போன்றவைகளை கைகளிலும், காலிலும் தடவிக்கொள்ளலாம். இது சூரிய கதிர்களில் இருந்து சருமம் வறண்டு போகாமல் இருக்க பாதுகாக்கும். மேலும் முகத்திற்கு சோப்புக்கு பதிலாக (Face wash) பேஸ் வாஷையும் பயன்படுத்தலாம். இது முக வறட்சியை பாதுகாக்கும்.
- Summer Skin Care Tips 8: பப்பாளி, தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற பழங்களை அரைத்து (Face pack) முக பூச்சாக பூசலாம். இப்படி செய்யும்போது முகம் ஈரப்பதத்துடனும், பொலிவாகவும் இருக்கும். மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றினால் வெயில் காலத்தில் சருமம் பாதிப்படைவதை தடுத்து சருமத்தை பாதுகாத்து கொள்ளலாம்.








