Gistak Media – Cinema News | Trending News | Latest News

Supreme Court Notification 2026 : உச்ச நீதிமன்றத்தில் 90 ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!

தற்போது உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 90 சட்ட ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஒரு அறிவிப்பு (Supreme Court Notification 2026) வெளியாகியுள்ளது. இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான வேலை வாய்ப்பு ஆகும். இளநிலை சட்டப்படிப்பாளர்களுக்கும் மற்றும் LLB முடித்தவர்களுக்கும் இது ஒரு சிறந்த வேலை வாய்ப்பாகும்.

உதவியாளர் பணியின் விவரங்கள்

பணி – சட்ட உதவியாளர் – கூடிய ஆராய்ச்சி உதவியாளர் ( Law Clerk-cum-Research Associate) மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 90

கல்வித் தகுதிகள்

  1. விண்ணப்பதாரர்கள் LLB முடித்தவர்களாக இருக்க வேண்டும். 3 years மற்றும் 5 years LLB பட்டம்.
  2. Final year law students-ம் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் அவர்கள் degree முடித்திருப்பதாக மற்றும் சேர்க்கைக்கு முன் சான்றிதழ் (Provisional Certificate) சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் LLB பட்டம் ஆனது Bar Council of India-வால்  அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.

மாதச் சம்பளம்

மாதச் சம்பளம் Rs.1,00,000 ஆகும். இந்த மாதச் சம்பளம் ஆனது Stipend அடிப்படையில் (Consolidated remuneration) வழங்கப்படும்.

வயது வரம்புகள் (Supreme Court Notification 2026)

வயது வரம்பு ஆனது 20 – 32 ஆகும்.  SC/ST/OBC/PwBD போன்ற பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு அனுமதிக்கப்படும். SC/ST பிரிவினர் – 5 ஆண்டுகள், OBC பிரிவினர் – 3 ஆண்டுகள், பொதுப் பிரிவு மாற்றுத்திறனாளிகள் – 10 ஆண்டுகள், SC/ST பிரிவு மாற்றுத்திறனாளிகள் – 15 ஆண்டுகள்.

தேர்வு முறை

  • எழுத்துத் தேர்வு,
  • சான்றிதழ் சரிபார்ப்பு என்ற அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 09.03.2025 அன்று இந்திய நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும்.. சென்னை, பெங்களூர், டெல்லி, கவுகாத்தி, ஐதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், டேராடூன், புனே மற்றும் மும்பை உள்பட 23 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். மொத்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யப்படும்.
Supreme Court Notification 2026 - Gistakmedia

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான sci.gov.in வழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்ப தேதி விவரங்கள்

  • விண்ணப்பிக்க தொடக்க தேதி – 20.01.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 03.2026

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top