Gistak Media

Suriya 46 : சூர்யாவின் 46-வது படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்

சினிமா துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூர்யா. இவர் தற்போது தனது 46-வது படத்தை வெங்கி அட்லூரி இயக்குவார் என்று (Suriya 46) அறிவித்துள்ளார். தெலுங்கு திரைப்பட இயக்குநரான வெங்கி அட்லூரி தமிழில் லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றார்.

சூர்யா 46 இயக்குநர் அறிவிப்பு (Suriya 46)

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரெட்ரோ திரைப்படம் மே 1-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சூர்யா கலந்து கொண்டு பேசினார். அப்போது, ​​ரெட்ரோ படத்திற்குப் பிறகு தான் நடிக்கும் படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் வெங்கி அட்லூரி (Suriya 46) இயக்குவார் என்று அறிவித்தார். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த ‘வாத்தி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக வெங்கி அட்லூரி இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம் தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், பல ஆண்டுகளாக திரையரங்குகளில் ஒரு படத்தை வெளியிட்டு வெற்றியை கொடுக்க முடியாமல் தவித்து வரும் சூர்யாவுடன் வெங்கி அட்லூரி இணைந்துள்ளார். இதனால், சூர்யா 46 படத்தின் மீதான எதிர்பார்ப்பு (Suriya 46)  அதிகரித்துள்ளது. இதற்கிடையில், கார்த்திக் சுப்பராஜின் ரெட்ரோ மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் சூர்யா 45 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் சூர்யா 46 வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Suriya 46 - Gistakmedia

சூர்யா 46 கதாநாயகி

படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும், பாக்யஸ்ரீ போஸ் கதாநாயகியாக ஒப்பந்தம் (Suriya 46) செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவர் சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் கிங்டம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top