Sweets எப்போது சாப்பிடலாம் : உணவு சாப்பிட்ட பிறகு இனிப்புகள் எடுத்து கொள்வது உடலுக்கு தீங்கானது
Sweets எப்போது சாப்பிடலாம் : நாம் தினமும் உணவு சாப்பிட்டவுடன் இனிப்புகளை எடுத்து கொண்டுவந்தால் வரும்காலங்களில் செரிமான பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுமென சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. நம்மில் பெரும்பாலோனர் உணவிற்குப் பிறகும் இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பார்ட்டிகளில் கூட, ஸ்டார்டர்கள் மற்றும் சூப்கள் முதலில் வழங்கப்படுகின்றன. கடைசியாக தான் இனிப்புகள் வழங்கப்படுவதையும் நாம் பார்த்து இருப்போம். இந்த பழக்கம் பல ஆண்டுகாலமாக தொடர்ந்துவருகிறது.
நம்முடைய ஆயுர்வேத உணவு முறையானது, இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, மற்றும் துவர்ப்பு என அறு சுவைகளை அடிப்படையாக கொண்டது. அதாவது, ஒருவர் முதலில் இனிப்புடன் உணவை தொடங்க வேண்டும். காரணம் நாம் முதலில் இனிப்பு ஒன்றை சாப்பிடும்போது நம் உடலில் அதிகளவு உமீழ்நீர் சுரக்கும். இதைத்தான் பண்டைய தமிழ் மருத்துவத்தில் தித்திப்பன எல்லாம் முதலில் கசப்பவை எல்லாம் கடைசியில் உண்ண வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மத்தியில் உப்பு, இறுதியில் துவர்ப்பு அல்லது கசப்பான ஒன்றைச் சாப்பிட வேண்டும். ஆறு சுவைகளையும் திருப்திப்படுத்தும் உணவை உண்பது நாம் ஆரோக்கியமாக இருக்க பெரிய அளவில் உதவுகிறது. ஒரே மாதிரியான உணவின் சுவை அல்லது சில சுவை கொண்ட உணவுகள் உடலில் பலவிதமான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Sweets எப்போது சாப்பிடலாம் :
Sweets எப்போது சாப்பிடலாம் : எப்போதும் உணவு உண்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு இனிப்புகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் சாப்பிடும் முன்னர் நம் உடலில் செரிமான சக்தி மிக அதிகமாக இருக்கும். இதனால் இனிப்பான உணவுகள் எளிதில் ஜீரணமாகும். உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும்.
நம் உடலில் மெதுவான வளர்சிதை மாற்றம் இருந்தால் நீரிழிவு, அதிக உடல் பருமன், தைராய்டு கோளாறுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உணவுக்கு முன் எப்போதும் இனிப்புகளை எடுத்து கொள்வது, உடலில் செரிமான ஹார்மோன்களை அதிகமாக வெளியிடுவதற்கும், செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!