இந்தியா டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு (T20 WC 2026 Ind vs Pak) முன்னேறியுள்ளது. இது பாகிஸ்தான் மீதான 8-1 என்ற மாபெரும் முன்னுரிமையை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் குரூப் A பிரிவில் இந்திய அணியின் முதலிடத்தை உறுதி செய்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்
இந்தியா – பாகிஸ்தான் மோதல் என்பது எப்பொழுதும் சாதாரண போட்டியாக இல்லாமல் ஒரு உணர்ச்சி மயமான ஒரு வரலாற்று நிகழ்வாக அமையும். கிரிக்கெட் உலகம் முழுவதும் ஆவலுடன் நோக்கும் நிகழ்வாகவே இருக்கும். இம்முறையும் அதே போல் நிகழ்ந்தது.
முதல்ல அடிங்க என்ற அழைப்பை ஏற்றது இந்தியா (T20 WC 2026 Ind vs Pak)
பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் 77 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இஷான் கிஷன் 3 சிக்சர் 10 பவுண்டரி குவித்து ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 27 ரன்களும் மற்றும் ரின்கு சிங் 11 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி 175 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சு வெற்றிக்கு அழைத்துச் சென்றது
இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தங்களது சிறந்த பந்துவீச்சால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹார்திக் பாண்டியா முதல் ஓவரில் சஹிப்சாதா ஃபர்ஹானை 0-வில் அவுட் ஆக்கினார். அடுத்த ஓவரில் ஜாஸ்பிரித் பும்ரா 13/2 என்ற கணக்கில் இரண்டு விக்கெட்டுகள் (T20 WC 2026 Ind vs Pak) எடுத்தார். அக்ஸர் படேல் பாபர் அசாமை அவுட் ஆக்கி 34/4 கொடுத்தார். உஸ்மான் கானால் 44 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி ஆனது பாகிஸ்தான் அணியை 114 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் வெற்றி திட்டமிட்ட அடுக்குத் திட்டத்தின் விளைவு
இந்தியாவின் வெற்றி 61 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி என்பது ஒரு திடீர் வெற்றி அல்ல. அது ஒரு திட்டமிட்ட அடுக்குத் திட்டத்தின் விளைவு ஆகும். பவர் பிளே தாக்குதல், மத்திய ஓவர்களில் கட்டுப்பாடு, மற்றும் டெத் துல்லியம் ஆகிய இந்த மூன்றும் (T20 WC 2026 Ind vs Pak) சரியாக இணைந்ததால் டி20-ல் வெற்றி சாத்தியமாகியது என்பதை இந்தப் போட்டி தெளிவாகக் காட்டி உள்ளது.
இந்தியா டி20 மேடையின் ராஜாவாக தொடர்கிறது
இந்தியாவின் வெற்றி 61 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி தொடர்ந்து இந்திய அணி ஆனது டி20 மேடையின் ராஜாவாக தொடர்வதை கிரிக்கெட் உலகிற்கு காட்டி உள்ளது.