T20 World Cup 2026 Schedule : டி20 உலகக் கோப்பை பிப்.7-ல் தொடக்கம்
ஐசிசி ஆனது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள டி20 ஆண்கள் உலகக்கோப்பை 2026 தொடருக்கான போட்டி (T20 World Cup 2026 Schedule) அட்டவணையை நவ.25 அன்று வெளியிட்டுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் முதல் போட்டி ஆனது பிப்.7-ம் தேதி மும்பையில் தொடங்கப்பட உள்ளது. இதன் இறுதி போட்டி ஆனது மார்ச் 8 ஆம் தேதி நடக்கிறது.
டி20 உலகக்கோப்பை 2026-ல் 20 அணிகள் இடம் பெற்றுள்ளன
இந்த 10வது ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து (T20 World Cup 2026 Schedule) நடத்த உள்ளன. இந்த 2026க்கான டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம், நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, கனடா, நபீமியா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகிய 20 அணிகள் இடம் பெற்றுள்ளன. முதல் முறையாக இத்தாலி அணி ஆனது இந்த 2026க்கான டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கு பெறும் தகுதி பெற்றுள்ளது.
2026 டி20 உலகக் கோப்பைகான குரூப்புகள் அறிவிப்பு.
இந்த 2026க்கான டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பெறும் 20 அணிகள் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி மற்றும் குரூப் டி என 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன் விவரங்கள் பின்வருமாறு.
குரூப் ஏ.
இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.
குரூப் பி.
ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஓமன் அணிகள் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன.
குரூப் சி.
இங்கிலாந்து, இத்தாலி, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் மற்றும் நேபாள அணிகள் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ளன.
குரூப் டி.
நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ளன.
2026 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டிக்கான தேர்வு முறை (T20 World Cup 2026 Schedule)
இவ்வாறு 4 குரூப்புகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். அந்த சூப்பர் 8-ல் வெற்றி பெறும் நான்கு அணிகள் ஆனது அரையிறுதியில் போட்டியிடும். அந்த அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் மோதும்.
ஜெய் ஷா டி20 உலகக் கோப்பைக்கான மைதானங்களை வெளியிட்டார்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா இந்த உலகக் கோப்பை தொடர் நடை பெற உள்ள முக்கிய இடங்களை வெளியிட்டார். டி20 உலகக் கோப்பைக்கான 55 போட்டிகள் இந்தியாவில் 5 மற்றும் இலங்கையில் 3 என மொத்தம் 8 மைதானங்களில் நடத்தப்பட உள்ளன. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களிலும், இலங்கையில் கொழும்புவில் உள்ள இரண்டு மைதானங்களிலும் மற்றும் கண்டியில் உள்ள ஒரு மைதானத்திலும் 55 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
ஆண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை
க்ரூப் - A
பிப்ரவரி 7 – பாகிஸ்தான் vs நெதர்லாந்து. இலங்கை கொழும்பில் காலை 11:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 7 – இந்தியா vs அமெரிக்கா. மும்பையில் இரவு 7:00 மணி
பிப்ரவரி 10 – பாகிஸ்தான் vs அமெரிக்கா. இலங்கை கொழும்பில் இரவு 7:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 12 – இந்தியா vs நமீபியா. டெல்லியில் இரவு 7:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 13 – அமெரிக்கா vs நெதர்லாந்து. சென்னையில் இரவு 7:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 15 – அமெரிக்கா vs நமீபியா. சென்னையில் பிற்பகல் 3:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 15 – இந்தியா vs பாகிஸ்தான். இலங்கை கொழும்பில் இரவு 7:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 18 – பாகிஸ்தான் vs நமீபியா. இலங்கை கொழும்பில் பிற்பகல் 3:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 18 – இந்தியா vs நெதர்லாந்து. அகமதாபாத்தில் இரவு 7:00 மணி அளவில் நடைபெறும்.
க்ரூப் - B
பிப்ரவரி 8 – இலங்கை vs அயர்லாந்து. இலங்கை கொழும்பில் இரவு 7:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 9 – ஜிம்பாப்வே vs ஓமன். இலங்கை கொழும்பில் பிற்பகல் 3:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 11- ஆஸ்திரேலியா vs அயர்லாந்து. இலங்கை கொழும்பில் பிற்பகல் 3:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 12 – இலங்கை vs ஓமன். இலங்கை கண்டியில் காலை 11:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 13 – ஆஸ்திரேலியா vs ஜிம்பாப்வே. இலங்கை கொழும்பில் காலை 11:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 14 – அயர்லாந்து vs ஓமன். இலங்கை கொழும்பில் காலை 11:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 16 – ஆஸ்திரேலியா vs இலங்கை. இலங்கை கண்டியில் இரவு 7:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 19 – இலங்கை vs ஜிம்பாப்வே. இலங்கை கொழும்பில் பிற்பகல் 3:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 20 – ஆஸ்திரேலியா vs ஓமன். இலங்கை கண்டியில் இரவு 7:00 மணி அளவில் நடைபெறும்.
க்ரூப் - C
பிப்ரவரி 7-ல் கொல்கத்தாவில் பிற்பகல் 3:00 மணி அளவில் மேற்கிந்தியத் தீவுகள் vs வங்காளதேசம் நடைபெறும்.
பிப்ரவரி 8-ல் மும்பையில் பிற்பகல் 3:00 மணி அளவில் இங்கிலாந்து vs நேபாளம் நடைபெறும்.
பிப்ரவரி 9-ல் கொல்கத்தாவில் காலை 11:00 மணி அளவில் வங்காளதேசம் vs இத்தாலி நடைபெறும்.
பிப்ரவரி 11-ல் மும்பையில் இரவு 7:00 மணி அளவில் இங்கிலாந்து vs மேற்கிந்திய தீவுகள் நடைபெறும்.
பிப்ரவரி 14-ல் கொல்கத்தாவில் பிற்பகல் 3:00 மணி அளவில் இங்கிலாந்து vs வங்காளதேசம் நடைபெறும்.
பிப்ரவரி 15-ல் மும்பையில் காலை 11:00 மணி அளவில் மேற்கிந்தியத் தீவுகள் vs நேபாளம் நடைபெறும்.
பிப்ரவரி 16-ல் கொல்கத்தாவில் பிற்பகல் 3:00 மணி அளவில் இங்கிலாந்து vs இத்தாலி நடைபெறும்.
பிப்ரவரி 17-ல் மும்பையில் இரவு 7:00 மணி அளவில் வங்காளதேசம் vs நேபாளம் நடைபெறும்.
பிப்ரவரி 19-அன்று கொல்கத்தாவில் காலை 11:00 மணி அளவில் மேற்கிந்தியத் தீவுகள் vs இத்தாலி நடைபெறும்.
க்ரூப் - D
பிப்ரவரி 8-ல் சென்னையில் காலை 11:00 மணி அளவில் நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் நடைபெறும்.
பிப்ரவரி 9-ல் அகமதாபாத்தில் இரவு 7:00 மணி அளவில் தென்னாப்பிரிக்கா vs கனடா நடைபெறும்.
பிப்ரவரி 10-ல் சென்னையில் பிற்பகல் 3:00 மணி அளவில் நியூசிலாந்து vs யுஏஇ நடைபெறும்.
பிப்ரவரி 11-ல் அகமதாபாத்தில் காலை 11:00 மணி அளவில் தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் நடைபெறும்.
பிப்ரவரி 13-ல் டெல்லியில் பிற்பகல் 3:00 மணி அளவில்
கனடா VS யுஏஇ
பிப்ரவரி 14-ல் அகமதாபாத்தில் இரவு 7:00 மணி அளவில் நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா நடைபெறும்.
பிப்ரவரி 16 – ஆப்கானிஸ்தான் vs யுஏஇ. டெல்லியில் காலை 11:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 17 – நியூசிலாந்து vs கனடா. சென்னையில் காலை 11:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 18 – தென்னாப்பிரிக்கா vs யுஏஇ. டெல்லியில் காலை 11:00 மணி அளவில் நடைபெறும்.
பிப்ரவரி 19 – ஆப்கானிஸ்தான் vs கனடா. சென்னையில் இரவு 7:00 மணி அளவில் நடைபெறும்.
ரோகித் சர்மா 2026 டி20 உலகக் கோப்பைகான விளம்பர தூதுவராக அறிவிப்பு
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்கான (T20 World Cup 2026 Schedule) விளம்பர தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் போட்டிகள் ஆனது நடைபெற உள்ளன. ஆனால் இந்த 7 லீக் போட்டிகளில் ஒன்றில் கூட இந்திய அணி இடம்பெறவில்லை.
Latest Slideshows
-
Reduce Body Heat Foods : இயற்கை முறையில் உடல் சூட்டை குறைக்கும் 10 சிறந்த உணவுகள்..!
-
Diabetes Food Chart in Tamil : சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்..!
-
Ayilai Fish Benefits in Tamil : அயிலை மீனின் ஆரோக்கிய இரகசியங்கள்..!
-
Pongal 2026 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & முக்கியத்துவமும்..!
-
Jananayakan Legal Issue : 'ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
-
Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் திரை விமர்சனம்..!
-
Raja Saab Movie Review : பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படத்தின் திரை விமர்சனம்..!
-
WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்..!
-
Humming Bird : ஓசனிச்சிட்டு பற்றி தெரியுமா? ஆச்சரியப்படும் உண்மைகள்..!
-
Jananayagan Postponed : ‘ஜனநாயகன்’ படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு.. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு