ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் T20 World Cup India Champion நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது முறையாக கோப்பை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி. இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்றது.
2023-ம் ஆண்டில் இதே மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் உலகக் கோப்பையை இழந்த இந்திய அணி, தற்போது டி20 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றது. மேலும், ஐசிசி தொடர்களில் எப்போதும் இந்திய அணிக்கு வில்லனாக அமையும் ஒரே அணியாக நியூசிலாந்து இருந்து வருவதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை நியூசிலாந்து அணி தோற்றதே இல்லை என்பதும், ஐசிசி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்திடம் வென்றதே இல்லை என்பதும் போட்டியை மேலும் சுவாரசியப்படுத்தின.
இந்திய அணி முதலில் பேட்டிங் (T20 World Cup India Champion)
பரபரப்பாக தொடங்கப்பட்ட இறுதிப்போட்டியில் வழக்கம்போல இந்திய அணி டாஸை இழந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 52 ரன்கள், சஞ்சு சாம்சன் 89 ரன்கள், இஷான் கிஷன் 54 ரன்கள் என அடித்து அசத்த இந்திய அணி 20 ஓவர்கள் (T20 World Cup India Champion) முடிவில் 255 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது. இது உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
256 ரன்கள் வெற்றி இலக்கு
256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி பவர்பிளேவில் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 19 ஓவரில் 159 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இந்திய அணி 3வது முறையாக டி20 உலகக் கோப்பை வென்று (T20 World Cup India Champion) வரலாறு படைத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக, டிம் சீஃபெர்ட் 52 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 43 ரன்களும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 விக்கெட்களும், அக்சர் படேல் 3 விக்கெட்களும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர். இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாகவும், இந்த தொடரில் 199 ஸ்ட்ரைக்ரேட் உடன் 321 ரன்கள் குவித்து காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டி என அனைத்திலும் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் தொடர்நாயகவும் தேர்வு செய்யப்பட்டார்.
3 உலக சாதனை படைத்த இந்தியா
2026 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, 3 டி20 உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணி, சொந்த மண்ணில் உலகக் கோப்பை வென்ற முதல் அணி, தொடர்ந்து இரண்டுமுறை டி20 உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணி என 3 உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளது.