10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு (T20 World Cup Semi Final) முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து அணி பௌலிங் தேர்வு
பரபரப்பான 2-வது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும் அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். வழக்கம்போல அபிஷேக் சர்மா ஏமாற்றம் அளித்தாலும், சஞ்சு சாம்சன் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 89 ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்த (T20 World Cup Semi Final) இஷான் கிஷன் 39 ரன்களும், தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே 43 ரன்களும், ஹர்திக் பாண்டியா 27 ரன்களும், திலக் 21 ரன்களும் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக்ஸ் மற்றும் ரஷீத் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
பெத்தேலின் அதிரடி சதம் வீண் (T20 World Cup Semi Final)
254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் பிலிப் சால்ட் 5 ரன்னில் ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 25 ரன்கள் எடுத்தார். மேலும், கேப்டன் ஹேரி ப்ரூக் 7 ரன்னில் விக்கெட்டைப் பறிகொடுத்த நிலையில், ஜேக்கப் பெத்தேலின் அதிரடியால் இங்கிலாந்து அணியின் ரன்ரேட் உயர்ந்தபடியே இருந்தது. அவர் இருக்கும் வரை இங்கிலாந்து அணியே வெற்றிபெறும் என எதிர்பார்த்த நிலையில், பெத்தேல் 48 பந்துகளில் 105 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியாவிற்கு நம்பிக்கை பிறந்தது. ஒருவழியாக 6 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் ஷிவம் துபே கடைசி ஓவரை வீசினார். அவர் வெறும் 22 ரன்களை மட்டுமே கொடுத்து இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தினார். இதையடுத்து இந்திய அணி 7 ரன்களில் த்ரில் வெற்றிபெற்றது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி
இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் மார்ச் 8-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் (T20 World Cup Semi Final) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
கோலியின் சாதனை சமன்
டி 20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் 89 ரன்கள் விளாசினார். இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் நாக் அவுட் சுற்றில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் (T20 World Cup Semi Final) விராட் கோலியுடன், சஞ்சு சாம்சன் சாதனையை பகிர்ந்து கொண்டார். விராட் கோலி கடந்த 2016-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 89 ரன்கள் விளாசியிருந்தார்.
இந்தியா சிக்ஸர் வேட்டை
நடப்பு டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 88 சிக்ஸர்களை விளாசி அதிக சிக்ஸர்களை அடித்த அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் (76 சிக்ஸர் 2026), தென் ஆப்பிரிக்கா (72 சிக்ஸர் 2026), வெஸ்ட் இண்டீஸ் (62 சிக்ஸர் 2024), இந்தியா (61 சிக்ஸர் 2024) உள்ளது.