Tablets To TN Govt School Teachers : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு Tablet வழங்கல்
Provision Of Tablets To Government School Teachers - Tamil Nadu Government Decision
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறையை மேம்படுத்த Tablet வழங்க தமிழக அரசு முடிவு (Tablets To TN Govt School Teachers) செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளில் பள்ளி கல்வித்துறையில் 4 புதிய திட்டங்களை அறிவித்திருந்தார். அந்த முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த திட்டங்கள் அனைத்தும் ஆசிரியர், ஆசிரியைகளின் நலனை காக்கும் வகையில் செயல்பட்டு வர உள்ளது. அதாவது மாணவர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் ஆசிரியர்களின் சேவையை மனதில் வைத்து தமிழ்நாடு அரசு இந்த புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 4 திட்டங்கள் :
- அனைத்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு Tablet (கைக்கணினி) வழங்குதல்.
- அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம். அதாவது அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
- ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உயர்கல்வி செலவை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்குதல்.
- மாணவர்களிடம் அரசின் நலத்திட்ட உதவிகளை சிறப்பாக கொண்டு செல்லும் ஆசிரியர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லுதல்.
பள்ளி கல்வித்துறை சார்பில் இந்த 4 புதிய திட்டங்களும் ரூ.225 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் உரை :
மேலும் முதல்வர் ஸ்டாலின், “கல்வி யாராலும் திருட முடியாத சொத்து. கல்வி அறிவு ஆனது உலக அறிவை வளர்க்கவும், மற்றும் பகுத்தறிவோடு சிந்திக்கவும் மிகவும் இன்றியமையாதது ஆகும். ஒருவர் வாழ்க்கையில் கற்றுக் கொள்கின்ற கல்வி அவரை என்றைக்கும் கைவிடாது என்பதால் அனைவரும் கல்வியைப் பெறவேண்டும். குறிப்பாக குழந்தைகள் பள்ளிகளை நோக்கி வரவேண்டும் என்பதற்காகத்தான் நீதிக்கட்சி காலத்தில் இருந்து நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.
Tablets To TN Govt School Teachers - தமிழக பள்ளி கல்வித்துறை மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது :
தமிழக பள்ளி கல்வித்துறை மூலம் தரமான கல்வியைக் கொடுக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக தமிழக அரசு ஆனது பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வரும் கல்வியாண்டு முதல் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் அசைன்மென்ட்கள், விடைத்தாள்களை திருத்துதல், மாணவர்களின் கற்றலை கண்காணித்தல் உள்ளிட்ட அனைத்து விதமான செயல்பாடுகளையும் ஆன்லைனில் மேற்கொள்ள இருக்கின்றனர். தமிழக அரசு அனைத்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு Tablet வழங்க முடிவு (Tablets To TN Govt School Teachers) செய்துள்ளது. இதனால் பேப்பர் ஒர்க் பெரிதளவில் குறையும். மேலும் ஆசிரியர்கள் முக்கியமான தகவல்களை தவற விடுவது, ஆவணங்கள் சேதமடைவது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
தமிழ் மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 80 ஆயிரம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் இதன்மூலம் பயன்பெறவுள்ளனர். இதன் முதல்கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மற்றும் வேலூர் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த 14,796 ஆசிரியர்களுக்கு Tablet வழங்குவதற்காக (Tablets To TN Govt School Teachers) அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலங்களுக்கு Tablet-கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் 2ம் கட்டமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 18,625 ஆசிரியர்களுக்கும் மற்றும் 3ம் கட்டமாக 6 மாவட்டங்களைச் சேர்ந்த 11,711 ஆசிரியர்களுக்கும் Tablet-கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. ஆசிரியர்கள் பெறும் Tablet-களை மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் வைத்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அந்த மையங்களில் பொருத்தப்பட்டிருக்கும்.
Latest Slideshows
-
Candidates Chess 2026 : கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்.. மகளிர் பிரிவில் பட்டம் வென்றார் வைஷாலி.!
-
Sambadi Aattam Book Review : மாரி செல்வராஜ் எழுதிய 'சம்படி ஆட்டம்' புத்தக விமர்சனம்.!
-
IPL 2026 CSK vs KKR : சென்னை அணியின் வெற்றி தொடருமா? கொல்கத்தாவுடன் இன்று மோதல்!
-
Vivo T5 Pro 5G : பட்ஜெட் விலையில் 'விவோ டி5 ப்ரோ 5ஜி' நாளை அறிமுகம்....
-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
-
CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி
-
Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?
-
LIK Movie Review : எப்படி இருக்கிறது LIK.. நான்காவது முறையாக ஹிட் அடித்தாரா பிரதீப்?