Tamil Nadu Budget 2023 Date: இந்த ஆண்டிற்கான தமிழ் நாட்டின் பட்ஜெட் தேதி அறிவிப்பு
Tamil Nadu Budget 2023 Date: சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை தலைவராகிய அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது தமிழகத்தின் சட்ட பேரவையில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வரும் மார்ச் மாதம் 20 ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என அறிவித்தார். இதனை தொடர்ந்து நிதிநிலை அறிக்கை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை குறித்து சட்டப்பேரவையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி அன்று பிற்பகல் முடிவு செய்யும் என்றார்.
எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் ஏற்கனவே பேசி தீர்வு காணப்பட்டது. அதில் எந்த வித குழப்பமும் இல்லை. மேலும் சட்டப்பேரவையை பொறுத்தவரையில் யார் எந்த இருக்கையில் அமர வேண்டும் என்பது என்னுடைய முழு அதிகாரத்திற்கு உட்பட்டது என்றார். மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் வருகின்ற மார்ச் 28 ஆம் தேதி கூடுதல் செலவினங்களுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் முன்பண மானிய கோரிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அறிவித்தார்.
வேளாண் நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கையின் மீதான விவாதம் ஆகியவை அலுவலக கூட்டத்திலேயே முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார். சட்டப்பேரவை மாடத்தில் இருந்து ஆளுநர் உரையின் போது தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த விவகாரம், உரிமை மீறல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ் நாட்டிற்கான 2023-2024 நிதி (Tamil Nadu Budget 2023 Date) அறிக்கை வருகின்ற மார்ச் 20 ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக என்று தெரிவித்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 9 ம் தேதி நடைபெற இருப்பதாக முன்னரே அறிவிக்கப்பட்டது. தமிழக நிதிநிலை அறிக்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.








