-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Tamil Nadu Budget 2023 to 2024: தமிழக அரசின் 2023-2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்
தமிழக அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான மூன்றாவது பட்ஜெட்டை (Tamil Nadu Budget 2023-2024) நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று மார்ச் 20, 2023-24 தாக்கல் செய்தார். தமிழக அரசின் சீர்திருத்த முயற்சிகள் மூலம் வருவாய் பற்றாக்குறை ஆனது சுமார் Rs. 62,000 கோடியில் இருந்து Rs. 30,000 கோடியாக குறைந்துள்ளதாக நிதியமைச்சர் தியாக ராஜன் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Budget தொடர்பான அறிவிப்புகள் மற்றும் மாதாந்திர உதவித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை சட்டசபையில் இன்று மார்ச் 20, 2023-24 தாக்கல் செய்தார். சட்டசபையில் Tamil Nadu Budget தாக்கல் செய்யும் போது, நிதியமைச்சர் பணம் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் மாதாந்திர உதவித் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்தார்.
Tamil Nadu Budget 2023 to 2024 முக்கிய அறிவிப்புகள்
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான தகுதியுள்ள பெண் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1,000 உதவித்தொகை வழங்குதல். ரூ.7,000 கோடி தொகையானது இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திராவிட இயக்கத் தலைவரும், கட்சியின் நிறுவனருமான, மறைந்த சி.என்.அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2023-ஆம் தேதி முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
- கவுரவ ஊதியம் – மகளிர் உரிமை தொகை – பெண்கள் உதவி செய்யும் உரிமை
- பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயண அனுமதி ஆனது வழங்கப்படும்.
- காலை உணவுத் திட்டம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.
- அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் சென்னையில் அமைக்கப்படும்.
- தொழிற்சாலை திறன் பள்ளிகள் ஆனது மதுரை மற்றும் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.
- கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் Metro Rail திட்டங்களுக்கு Rs. 25 கோடி ஒதுக்கப்படும்.
- கிண்டியில் கலைஞர் மெமோரியல் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கப்படும்.
- ஜவஹர்லால் நேரு அவுட்டோர் ஸ்டேடியம் ஆனது Rs. 25 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.
- 2023 – 2024 நிதியாண்டில், TN மாநில அரசு ஆனது 1,500 கோடி செலவில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகளை கட்டும்.
- 6,967 கோடி ஆனது உயர்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும்.
- தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க Rs. 500 கோடி ஆனது பயன்படுத்தப்படும்.
- அரசாங்கம் தற்போது உள்ள இலவச பஸ் பாஸ் திட்டத்தை மேலும் அதிகமாக 591 பேர்களுக்கு (i.e., வயதான தமிழ் அறிஞர்களுக்கு) அரசாங்கம் விரிவுபடுத்தும்.
- அடுத்த வரும் 3 ஆண்டுகளில் வடசென்னை வளர்சி திட்டம் Rs. 1,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இது வடசென்னையின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்.
- இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35% மூலதன மானியம் மற்றும் 6% வட்டி மானியம் கொண்ட SC/ST தொழில்முனைவோருக்கு வழங்கும் ‘அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டத்தை’ அரசாங்கம் தொடங்கும். இத் திட்டதிற்காக Rs. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மாநிலத்தில் உள்ள சிவில் சர்வீஸ் தேர்வில் முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும்.
- சிவில் சர்வீஸ் தேர்வின் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு Rs. 25,000 வழங்கப்படும்.
- தமிழ்நாடு அரசு ஆனது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு 10 கோடி ஒதுக்கியுள்ளது.
சீர்திருத்த முயற்சிகள் மூலம் வருவாய்பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது
சீர்திருத்த முயற்சிகள் மூலம் வருவாய் பற்றாக்குறை சுமார் ரூ.62,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் கூறினார்.
சபையின் அலுவல் ஆலோசனைக் குழு ஒன்று கூடி 2023-24ம் ஆண்டுக்கான விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியையும் மற்றும் பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யும் தேதியையும் முடிவெடுக்கும் என்று நிதியமைச்சர் கூறினார்.
நடப்பு 2023 – 2024 நிதியாண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளையும், அடுத்த நிதியாண்டின் ஒரு பகுதிக்கான வாக்கெடுப்பையும் மார்ச் 28ம் தேதி அன்று நிதியமைச்சர் தாக்கல் செய்வார். கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நினைவு கூர்ந்தார்.
பேராசிரியர் எஸ்தர் டுப்லோ, டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியன், பேராசிரியர் ஜீன் டிரேஸ் மற்றும் டாக்டர் எஸ் நாராயண் ஆகிய EAC (Economic Advisory Council) உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.








