Tamil Nadu Budget 2024 : தமிழ்நாடு 2024 - 2025 பட்ஜெட்டின் Top 10 அறிவிப்புகள்
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட தமிழ்நாடு பட்ஜெட்டின் டாப் 10 தங்கமான அறிவிப்புகள். தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை (Tamil Nadu Budget 2024) வெளியிட்டார்.
Tamil Nadu Budget 2024 :
தமிழ் புதல்வன் திட்டம் :
அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் மற்றும் அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவரின் உயர் கல்வியை சேர்க்கையை உயர்த்தவும் தமிழ் புதல்வன் என்னும் திட்டம் வரும் 2024-2025 நிதியாண்டில் (Tamil Nadu Budget 2024) இருந்து அறிமுகப்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள், பாடப்புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவரது கல்வியை மெருகேற்றிட உதவிடும் வகையில் மாதந்தோறும் அந்த மாணவர்களின் வங்கி கணக்கில் Rs.1000 ரூபாய் நேரடியாக செலுத்தப்படும்.
மெட்ரோ சேவையை நீட்டிக்க ரூ,4,625 கோடி :
மெட்ரோ சேவையை சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை நீட்டிக்க ரூ.4,625 கோடி மதிப்பிடப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்கீட்டு நிதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டம் :
அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் Rs.1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் ஆனது இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும், இதற்காக 370 கோடி ஆனது ஒதுக்கப்படும்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும் :
மூன்றாம் பாலினத்தவரின் உயர்கல்வி கல்லூரிப் படிப்பு மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் படிப்புக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.
நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை :
திருச்சி, மதுரை, கோவை மற்றும் ஈரோடு ஆகிய முக்கிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை ஆனது தயார் செய்ய Rs.5 கோடியானது ஒதுக்கீடு செய்யப்படும். குறிப்பாக காவிரி, வைகை, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகள் மேம்படுத்தப்படும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அடையாறு மற்றும் கொசஸ்தலை உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைக்க நடவடிக்கைகள் (Tamil Nadu Budget 2024) ஆனது எடுக்கப்படும்.
சிங்காரச் சென்னை 2 திட்டம் :
சிங்காரச் சென்னை 2 என்ற திட்டத்திற்கு Rs.500 கோடி ஆனது ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை சாலைகளை விரிவுபடுத்தும் திட்டம் :
சென்னை மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளை விரிவுபடுத்த Rs.300 கோடி நிதி ஆனது ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்தும் திட்டம் :
சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளை மேம்படுத்த Rs.100 கோடி ஆனது ஒதுக்கீடு செய்யப்படும்.
வடசென்னை வளர்ச்சி திட்டம் :
சென்னையின் வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள Rs.1,946 கோடி ஆனது ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்தும் திட்டம் :
சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளை மேம்படுத்த Rs.100 கோடி ஆனது ஒதுக்கீடு செய்யப்படும்.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் :
வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை நிதி ஆயோக் அறிக்கைப்படி கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு செய்துள்ளது. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்ப மக்களுக்கு அரசின் தகுந்த உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி எடுத்துள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் :
புதிய சிப்காட் பூங்கா Rs.120 கோடியில் தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் அமைக்கப்படும். புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஆனது வேலூர், தஞ்சாவூர், வேலூர், திருப்பூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 13,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். விருதுநகர் மற்றும் சேலத்தில் ஜவுளி பூங்கா ஆனது அமைக்கப்படும். மதுரையில் 345 கோடி செலவில் 640,000 சதுர அடியிலும் மற்றும் திருச்சியில் 350 கோடி செலவில் 630,000 சதுர அடியிலும் அமைக்கப்படும் என்றும் (Tamil Nadu Budget 2024) அறிவிக்கப்பட்டு உள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!