Tamil Nadu Budget Assembly Session :
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று (Tamil Nadu Budget Assembly Session) தொடங்குகிறது. வரும் 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று காலை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடருக்கு வந்து உரை நிகழ்த்த வருமாறு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, ஆளுநருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இன்று தலைமைச் செயலகத்திற்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவைத் தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி, பேரவைச் செயலர் சீனிவாசன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.
அதைத்தொடர்ந்து கவர்னருக்கு போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டு சிவப்பு கம்பள மரியாதையுடன் சட்டசபைக்கு அழைத்து செல்லப்படுவார். முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும். பின்னர், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரை தொடங்கி வைக்க தமிழக அரசு தயாரித்துள்ள உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்த்துகிறார். அவரது உரையின் தமிழாக்கத்தை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வாசிப்பார். இன்று நடைபெறும் (Tamil Nadu Budget Assembly Session) ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் உரையை டி.டி தமிழ்ச் செய்திகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கவர்னர் உரையின் போது, அரசு தயாரித்த உரையை தவிர, சில பத்திகளை படிக்காமல், சில வரிகளை தானே சேர்த்தும் வாசித்தார்.
இதனால் ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து பேரவை உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஆளுநரே வாசித்த பகுதிகளை குறிப்புகளில் சேர்க்கக் கூடாது என்றும், அரசு தயாரித்த உரையை சேர்க்க வேண்டும் என்றும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே இன்றைய கூட்டத்தில் அரசு தரப்பில் ஆற்றிய உரையை ஆளுநர் வாசிப்பாரா? அல்லது கடந்த முறை போல் சில பத்திகள் தவிர்த்துவிட்டு படிக்கப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tamil Nadu Budget Assembly Session : இன்றைய கூட்டத்தில், கவர்னர் உரை முடிந்ததும், தேசிய கீதம் பாடப்பட்டு, ஆளுநருக்கு அளிக்கப்படும் மரபுபடி அவரை வழியனுப்பி வைத்து நன்றி தெரிவிக்கப்படும். அதன்பிறகு பேரவைத் தலைவர் தலைமையிலான குழு கூடி எத்தனை நாள்கள் பேரவையை நடத்தலாம் என்று முடிவு தீர்மானிக்கப்படும். பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் நடத்தப்படும். தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த சந்திப்பில் காரசாரமான விவாதங்களும் கருத்து மோதல்களும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 2024-25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வரும் 19ம் தேதி தாக்கல் செய்கிறார். மறுநாள், 20ம் தேதி, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.