உலகளாவிய எலக்ட்ரானிக்ஸ் மதிப்பு சங்கிலியில் இந்தியாவின் பங்கு ஆனது மிகவும் முக்கியமானது. மேலும் இந்திய நாட்டிற்குள் தமிழகத்தின் பங்கு ஆனது மிகவும் முக்கியமானது.
மின்னணு வன்பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாட்டிலேயே முக்கிய மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. கணினி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆப்டிகல் தயாரிப்புகள் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தேசிய உற்பத்தியில் 18 %-தைக் கொண்டுள்ளது. 2021-22ல் 2.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு ஏற்றுமதியின் அடிப்படையில் இது நான்காவது இடத்தில் உள்ளது
தமிழகத்தின் வியத்தகு வளர்ச்சிக்கு எலக்ட்ரானிக்ஸ் துறை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2022 – ஆம் நிதியாண்டில் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 41% – ஆக உயர்ந்து 15 பில்லியன் டாலராக இருந்தது. இப்போது தமிழ்நாடு ஆனது இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் நம்பர் 1 மையமாக வெளிவர உள்ளது. இந்தியாவின் மொத்த பங்களிப்பில் தமிழ்நாடு மாநிலம் ஆனது 25% பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நன்கு வளர்ந்த உற்பத்தி முறையை மேம்படுத்தி வருவதால் தமிழ்நாடு மின்னணு வன்பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாட்டிலேயே முக்கிய மாநிலமாக உருவெடுத்துள்ளது.
தொலைத்தொடர்பு கருவிப் பிரிவில் மொபைல் போன்கள் (ஸ்மார்ட்போன்) ஏற்றுமதிகள் 2022 – ஆம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ.60,000-கோடியை தாண்டியது. இது நாட்டின் ஒட்டுமொத்த மின்னணு ஏற்றுமதியில் $8.8 பில்லியன் அல்லது பாதிக்கும் மேலானது. இது முந்தைய ஆண்டை விட 100% அதிகரித்துள்ளது.
Nokia, Samsung, Flex, Dell, Motorola, Salcomp, HP, மற்றும் Foxconn உள்ளிட்ட முன்னணி 16 மின்னணு உற்பத்தியாளர்களுக்கு மத்தியில் இந்த 60,000 கோடி ரூபாய் ஏற்றுமதியில் 50% ஆப்பிள் நிறுவனம் பங்களித்துள்ளது.
இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு மாநிலம் ஆனது 25% பங்களிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்திய எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (ELCINA – Electronics Industries Association of India ) ஏற்பாடு செய்த 12 வது மாநாட்டில் செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆனது இத்துறையில் முன்னணியில் இருப்பதற்கான நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பரந்த அளவிலான மானியங்களை வழங்கும் எலக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர் உற்பத்திக் கொள்கையை வெளியிட்டது.
தமிழ்நாட்டில் இரண்டு பிரத்யேக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZs) எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹார்டுவேர் உற்பத்திக்காக உள்ளன. 50 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றும், 70 கிமீ தொலைவில் உள்ள ஒரகடத்தில் ஒன்றும் உள்ளன. (i.e., 800 ஏக்கர் பரப்பளவில்).
எலக்ட்ரானிக்ஸ் துறையின் வளர்ச்சி விகிதம் தமிழ்நாட்டில் சுமார் 14% ஆக இருப்பதால் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் 300 பில்லியன் டாலராக இருக்கும் இந்திய நாட்டின் ஒட்டுமொத்த எலக்ட்ரானிக்ஸ் துறையில் தமிழகத்தின் பங்கு ஆனது 25% – 30%-ஆக இருக்கும். அதாவது அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு ஆனது 100 பில்லியன் டாலர் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் மற்றும் உற்பத்தித் தொழிலை அடையும் சிறந்த நிலையில் உள்ளது.
தமிழகத்தின் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு எலக்ட்ரானிக்ஸ் துறை மிகவும் முக்கியமானது. எலக்ட்ரானிக்ஸ் துறை ஆனது பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்குகிறது. அதோடு மட்டுமல்லாமல், பிஎச்.டி போன்ற தகுதிகளைக் கொண்ட உயர் கல்வியறிவு பெற்ற மனித வளங்களைப் பணியமர்த்த முடியும் என்பதால் இந்தத் தொழில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பங்கைக் கொண்டுள்ளது.
எலக்ட்ரானிக் மின்னணு உதிரிபாகங்கள் துறை
ஆரம்பத்தில் தமிழ் மாநிலத்தின் பலம் ஆனது வாகன உதிரிபாகத் துறையில் இருந்தது, பின்னர் அது மேல்நோக்கி நகர்ந்தது. இதேபோல், அதிநவீன மின்னணு பாகங்கள் மற்றும் வடிவமைப்பிற்கு மேல்நோக்கி நகர்த்துவதற்கு தமிழ் மாநிலத்தின் எலக்ட்ரானிக் மின்னணு உதிரிபாகங்கள் துறையைப் பயன்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான சாத்தியம் உள்ளது.
“இது குறைந்த ஆபத்து மற்றும் குறைந்த முதலீட்டு உத்தி. இதில்தான் MSMEகள் உட்பட கணிசமான அளவு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன,” என்றார். கணினி வன்பொருள் மற்றும் சாதனங்கள் ஏற்றுமதி 31.9% அதிகரித்து $375 மில்லியனாக இருந்தது.
எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 52% பெரிதாகிறது
எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்குப் பிறகு, எலக்ட்ரானிக்ஸ் ஆனது தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய பங்களிப்பாளராக இருந்து வருகிறது. கடந்த 2022 -ஆம் நிதியாண்டில் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி ஆனது 41% உயர்ந்து 15 பில்லியன் டாலராக இருந்தது, மேலும் இறக்குமதி ஆனது 35.4% உயர்ந்து 71.2 பில்லியன் டாலராக இருந்தது.
ஃபாக்ஸ்கான், பெகாட்ரான்மற்றும் விஸ்ட்ரான் ஆகிய மூன்று ஆப்பிள் ஒப்பந்த உற்பத்தியாளர்கள் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுபவர்கள் ஆவர். சாம்சங் ஸ்மார்ட் போன்களுக்கான முக்கிய ஏற்றுமதி சந்தைகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகும்.
தமிழ்நாடு ஆனது semiconductors-களை 1 டிரில்லியன் டாலர் சந்தை வாய்ப்பாக பார்க்கிறது. தேவையான வளங்கள் தமிழ் நாட்டின் அரசிடம் உள்ளன.சிங்கப்பூர் நிறுவனமான I.G.S.S-உடன் மாநிலத்தில் fab manufacturing unit அமைப்பதற்காக ரூ.25,000 கோடிக்கும் மேலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சமீபத்தில் தமிழ்நாடு ஆனது கையெழுத்திட்டு உள்ளது.