Gistak Media

Tamil Nadu Election 2026 : தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல்.. மே 4-ம் தேதி ரிசல்ட்..!

தமிழ்நாட்டில் தற்போது தொடரும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதவிக்காலம் (Tamil Nadu Election 2026) ஆனது வரும் மே மாதம் 10 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதைப்போலவே புதுச்சேரி, கேரளம், அசாம், மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலமும் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

சட்டமன்ற தேர்தல் தேதிகள் 15.03.2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆனது 15.03.2026 அன்று சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. இந்திய நாடே  தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று (மார்ச் 15) மாலை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆனது இந்த சட்டமன்ற தேர்தல் தேதி (Tamil Nadu Election 2026) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆனது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்றும் அதன் வாக்கு எண்ணிக்கை ஆனது மே 4-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆட்சியை தீர்மானிக்கும் இந்த தேர்தல் விவரங்கள்

தமிழக மாநிலத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2.77 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் 2.89 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். பிப்ரவரி 2026-ல் வெளியிடப்பட்ட (Tamil Nadu Election 2026) இறுதி வாக்காளர் பட்டியலில் 27.53 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் சம்பந்த்தப்பட்ட முக்கிய தேதி விவரங்கள் (Tamil Nadu Election 2026)

  • வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் – மார்ச் 30,2026 முதல் ஏப்ரல் 6, 2026 வரை.​
  • வேட்புமனு பரிசீலனை செய்யும் நாள் – ஏப்ரல் 7, 2026.​
  • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு நாள்- ஏப்ரல் 15, 2026 அன்று வெளியீடு.
  • ஓட்டுப்பதிவு நடைபெறும் நாள்- ஏப்ரல் 23, 2026.​
  • ரிசல்ட் வெளியீடு நாள்- மே 4, 2026.​
Tamil Nadu Election 2026 - Gistakmedia

மாநில அரசியல் கட்சிகளின் முழு அளவிலான தேர்தல் பிரச்சாரங்கள்

தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து இந்திய மாநிலம் முழுவதும் அரசியல் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சார ராலிகள் நடைபெற தொடங்கியுள்ளன. தற்போது மாநில அரசியல் கட்சிகள் (Tamil Nadu Election 2026)  தங்களது முழு அளவிலான தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

வாக்குப்பதிவுகள் நடைபெறும் விதம்

தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைமையகங்களில் வாக்கு எண்ணிக்கை ஆனது நடைபெறும். இந்த தேர்தலை வெளிப்படையாக நடத்த 

  • Electronic Voting Machine (EVM)
  • VVPAT
    ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் அன்றே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல்

தமிழகம் முழுவதும் வாக்காளர்களின் தீர்ப்பை எதிர்நோக்கி அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்கும் என்று பல அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top